தமிழ் சினிமாவில் இளம் ஒளிப்பதிவாளர் ஃபரூக் ஜே.பாஷா, பத்து தல, ரோமியோ படங்களின் வெற்றிக்குப் பிறகு தற்போது சோனி லைவ் ஒடிடியில் வெளியாகி பெரும் வரவேற்பைக் குவித்து வரும் குற்றம் புரிந்தவன் சீரிஸின் சிறப்பான ஒளிப்பதிவிற்காக பலத்த பாராட்டுக்களை பெற்று வருகிறார்.
தமிழில் மிகச்சிறந்த ஒளிப்பதிவாளர்களில் ஒருவராக கவனம் ஈர்த்து வருபவர் இளம் ஒளிப்பதிவாளர் ஃபரூக் ஜே.பாஷா. முன்னணி ஒளிப்பதிவாளர் ஏகாம்பரம் மற்றும் தி கோட் லைஃப் பட ஒளிப்பதிவாளர் KS சுனில் ஆகியோரிடம் உதவியாளராக பணியாற்றியவர். தமிழில் வெளியான பழைய வண்ணாரப்பேட்டை படம் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமானார்.
ரிஷி ரிச்சர்டு நடித்த ருத்ர தாண்டவம், சிம்பு நடித்த பத்து தல, செல்வராகவன், நட்டி நடித்த பகாசூரன், விஜய் ஆண்டனி நடித்த ரோமியோ போன்ற படங்களில் பணியாற்றியுள்ளார் மேலும் முகிலன் வெப் சீரிஸிலும், தற்போது சோனி லைவ் ஒடிடியில் வெளியாகி பெரும் வரவேற்பைக் குவித்து வரும் குற்றம் புரிந்தவன் சீரிஸிலும் சிரப்பான ஒளிப்பதிவைத் தந்துள்ளார். மேலும் இந்தியாவின் உச்ச நட்சத்திரங்களான அமிதாப் பச்சன், கமல்ஹாசன், நாகர்ஜினா உப்ட பலருடன் 500 க்கும் மேற்பட்ட விளம்பர படங்களுக்கும் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
பலத்த பாராட்டுக்களை பெற்று வரும் சோனி லைவ் ott யில் வெளியாகி உள்ள குற்றம் புரிந்தவன் குறித்து கூறுகையில்..,
இயக்குநர் செல்வமணி முனியப்பன் அவர்களின் எழுத்து மற்றும் பார்வை மிகத் தெளிவாக இருந்தது. இந்த சீரிஸின் திரைக்கதை முழுக்க இயல்புத்தன்மையும், உளவியல் ஆழமும் கொண்டதாக இருந்தது; அதுவே ஒளிப்பதிவின் காட்சியமைப்பை தீர்மானிக்க முக்கிய காரணமாக அமைந்தது. தயாரிப்பு நிறுவனம் ஹாப்பி யூனிகார்ன் உடன் கடந்த 15 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறேன், இதுவரை நூற்றுக்கணக்கான விளம்பரப் படங்களில் இணைந்து பணியாற்றிய அனுபவம் இருப்பதால் மிக எளிதாக இருந்தது. தற்போது அந்த நிறுவனம் நீண்ட வடிவ கதையாக்கத்திற்கு (long format) மாறியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது, மீண்டும் அவர்களுடன் இணைந்து ஒரு வெப் சீரிஸில் பணியாற்றியது மகிழ்ச்சி.
குற்றம் புரிந்தவன் இந்த அளவு பாராட்டுக்களைக் குவிக்கும் என நினைக்கவில்லை. எல்லோரும் என் பெயரைக் குறிப்பிட்டு பாராட்டுவது பெரும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
பொதுவாக திரைப்படங்களுக்கும், சீரிஸிற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. படத்தில் இருக்கும் ஹீரோயிஸம், உச்சகட்டங்கள் எதுவும் சீரிஸில் இருக்காது. சீரிஸ் முழுக்க இயல்பான டிராமா இருக்கும். இந்தக்கதை குற்றம் புரிந்தவனின் மனநிலை சம்மந்தப்பட்டது. அதை திரையில் கொண்டு வர, முழுக்க க்ரே டோனில், நிஜத்தில் ஒரு ரூமில் எவ்வளவு வெலிச்சம் இருக்குமோ அதே போல் ஒளிப்பதிவு செய்தோம். இப்போது ரசிகர்கள் தனியாக குறிப்பிட்டு பாராட்டுவது பெரும் மகிழ்ச்சியைத் தருகிறது.
அமிதாப்பச்சன், கமல்ஹாசன் என முன்னணி நடட்சத்திரங்களோரு பணிபுரிந்தது குறித்தும் விளம்பர படங்கள் குறித்தும் கூறும்போது..,
விளம்பர படங்கள் எப்போதும் ஒளிப்பதிவாளரை நம்பித் தான் இருக்கும், ஒரு நிமிடத்தில் ரசிகனை அசையவிடாமல் இழுத்துப் பிடிக்க வேண்டும். விளம்பரம் ஒவ்வொரு ஃப்ரேமும் அழகாக இருக்க வேண்டும். 500 க்கும் மேற்பட்ட உள்நாட்டு வெளிநாட்டு விளமபரங்மள் செய்துள்ளேன் எல்லாமே மிகச்சிறந்த அனுபவம்.
நடிகர் அமிதாப்பச்சன் சொன்ன நேரத்தில் செட்டில் இருப்பார். அவரது அர்ப்பணிப்பு ஆச்சரியம் தந்தது. நிறைய நடிகர்களுடன் வேலை பார்த்திருந்தாலும் கமல்ஹாசன் சாருடன் மையம் விளம்பரத்துக்காக வேலை பார்த்தது மறக்க முடியாத அனுபவம். முதன்முறை வாழ்க்கையில் கூஸ்பம்ஸாக உணர்ந்தேன். அவருடன் வேலை பார்த்த போது அவரிடம் இருந்து நிறைய கற்றுக்கொண்டேன்
நடிகர் சிம்புவுடன் பத்து தல படத்தில் பணியாற்றியது குறித்து கூறுகையில்..,
முதல் இரண்டு படங்களை ஒப்பிடுகையில் பத்து தல படம் மிகப்பெரிய பட்ஜெட் படம். அப்படத்தின் ரயில் காட்சிக்காக இந்தியா முழுதும் சுற்றினோம். ஆக்சன் காட்சிகள் 200, 300 பேரை வைத்து எடுத்தோம். சிம்பு ஒரு ஜீனியஸ் அவருக்கு எல்லாம் தெரியும், என்ன லென்ஸ், என்ன ஷாட் என எல்லாம் தெரியும், எதாவது வித்தியாசமாக செய்தால் உடனே பாராட்டுவார். அப்படத்திற்கு பெரிய பாராட்டுக்கள் கிடைத்தது.
பத்து தல படம் முழுக்க ஆக்சன் படம் ஆனால்
விஜய் ஆண்டனியின் ரோமியோ ஒரு காதல் படம். அதில் முழுதாக வேறொரு கலர் பேளட்டில், ரொமான்ஸ் ஃபீல் வருமாறு வேலை பார்த்தேன். அதில் விஜய் ஆண்டனி மிகவும் அழகாக இருந்ததாக இப்போது வரை அனைவரும் பாராட்டுகிறார்கள்.
ஒரு பெரிய பிரியட் படத்தில் வேலை செய்ய வேண்டும் என்பது என் கனவு. நல்ல திரைக்கதை, நல்ல டிராமா படங்களில் அடுத்தடுத்து வேலை பார்க்க ஆசை. குற்றம் புரிந்தவன் சீரிஸிற்கு பிறகு நிறைய நல்ல வாய்ப்புகள் வருகிறது. இயக்குநரின் கனவை அவர் நினைத்தது போல், ரசிகர்களுக்கு பிடித்த மாதிரி திரையில் கொண்டு வர வேண்டும் என்பதே விருப்பம் என்றார்.
தமிழ் திரையுலகில் கவனம் ஈர்த்து வரும் ஃபரூக் ஜே.பாஷா, தமிழின் அடுத்த தலைமுறையின் சிறந்த படைப்பாளியாக மிளிருவார் என ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.