சென்னையில் வெங்காயம் ரூ.150 வரை விற்பனை!

சென்னையில் வெங்காயம் ரூ.150 வரை விற்பனை!

சென்னை கோயம்பேடு சந்தையில்பெரிய வெங்காயம் ரூ.50 முதல் ரூ.150 ரூபாய் வரை விற்கப்படுகிறது.வெங்காய உற்பத்தியில் முதல் இரண்டு இடங்களை வகிக்கும் மகாராஷ்டிரா மற்றும் கர்நாடக மாநிலங்களில் இந்த ஆண்டு கொட்டி தீர்த்த தென்மேற்கு பருவமழையால் வெங்காய பயிர்கள் அழிந்தன. இதனால் நாடு முழுவதும் பெரிய வெங்காயம் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வெங்காய தட்டுப்பாட்டை நீக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன.சென்னை கோயம்பேடு சந்தையில் பெரிய வெங்காயம் ரூ.50 முதல் ரூ. 150 ரூபாய் வரை விற்கப்படுகிறது.