டெல்லி மாணவர்கள் போராட்டத்தில் வெடித்த வன்முறை! 10 பேர் அதிரடி கைது!
டெல்லியில் ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் ஏற்பட்ட கலவரத்தில் போலீசார் மாணவர்கள் மீது தடியடி நடத்தினர்.இந்த மாணவர்கள் போராட்டத்தில் வன்முறை வெடித்தது தொடர்பாக 10 பேரை கைது செய்து விசாரித்து வருகிறது. டெல்லி போலீஸ்.
மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கடந்த 15ஆம் தேதி டெல்லி ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது. இதனால், போலீசார் மாணவர்கள் மீது தடியடி நடத்தினர்.
இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த வன்முறை சம்பவம் தொடர்பாக, 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்தி வன்முறைக்கு காரணமானவர்களை கண்டறிய உள்ளனராம். இந்த கைது செய்யப்பட்ட 10 பேரும் மாணவர்கள் இல்லை என விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.