டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வின் பாடத்திட்டம் மாற்றம்.. மொழித்தாள் நீக்கம்

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வின் பாடத்திட்டம் மாற்றம்.. மொழித்தாள் நீக்கம்

சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வின் பாடத்திட்டம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது, முதல் நிலைத் தேர்வில் மொழித்தாள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. அதற்கு பதில் பொது அறிவு வினாக்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

டிஎன்பிஎஸ்சி என்று அழைக்கப்படும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 2 தேர்வில் நேர்காணல் அல்லாத பணியிடங்களுக்கான பாடத்திட்டம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதன்படி குரூப் 2 ஏ தேர்வில் இனி ஒரு தேர்வுக்கு பதிலாக இரு தேர்வு முறை அமலுக்கு வருகிது. அதாவது குரூப் 1 தேர்வில் இருப்பதை போல், முதல் நிலை தேர்வு மற்றும் பிரதான தேர்வு என இரண்டு தேர்வுகள் அறிமுகம் ஆகிறது.

இதேபோல் மொழித்தாள் பகுதி தனியாக இருந்தது நீக்கப்பட்டு, தமிழக அரசியல் வரலாறு, தமிழக பாரம்பரிய பகுதிகள், பொது அறிவு பாடப்பகுதியிலேயே சேர்க்கப்பட்டுள்ளது.