சர்வதேச டி20 போட்டியில் அதிக ரன் சேசிங் செய்த இந்தியா
இந்தியா வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் 207 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து களமிறங்கிய இந்திய கேப்டன் விராட்கோலி 94 ரன்கள் அடித்ததன் மூலம் இந்தியா 6 விககெட் வித்தியாவத்தில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் இந்திய அணி 208 ரன்கள் இலக்கை வெற்றிகரமாக சேசிங் செய்து அசத்தியது. இதன் மூலம் சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் இந்தியாவின் அதிகபட்ச சேசிங் இதுவாகும். இதற்கு முன்பு 2009-ம் ஆண்டு மொகாலியில் நடந்த இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 207 ரன்கள் இலக்கை விரட்டிப்பிடித்ததே சிறந்த சேசிங்காக இருந்தது.