பிலிப்பைன்ஸை உலுக்கிய நிலநடுக்கம் "ரிக்டர் அளவில் 6.8 ஆக பதிவு" மக்கள் சாலைகளில் தஞ்சம் !!(

பிலிப்பைன்ஸை உலுக்கிய நிலநடுக்கம் "ரிக்டர் அளவில் 6.8 ஆக பதிவு" மக்கள் சாலைகளில் தஞ்சம் !!(
பிலிப்பைன்ஸை உலுக்கிய நிலநடுக்கம் "ரிக்டர் அளவில் 6.8 ஆக பதிவு" மக்கள் சாலைகளில் தஞ்சம் !!(

பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள மிந்தானோ வட்டாரத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியுள்ளதால் மக்கள் அச்சமைடைத்துள்ளனர்.

நிலநடுக்கத்தால் அதிகம் பாதிக்கப்படும் இடமாக பிலிப்பைன்ஸ் உள்ளது. ஏராளமான தீவை உள்ளடக்கி "நெருப்பு வளையம்" எனப்படும் மிகவும் ஆபத்தான பகுதியில் பகுதியில் இந்நாடு அமைந்துள்ளது அதனால் அடிக்கடி நிலநடுக்கத்தால் பாதிக்கப்படுகிறது.

இந்நிலையில் பிலிப்பைன்சின் மிந்தானோ பகுதியில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 6.8 ஆகா பதிவாகியுள்ளது என அமெரிக்க புவியியல் ஆய்வாளர்கள் அறிவித்துள்ளனர்.

இந்த நிலநடுக்கத்தால் பல அடுக்குமாடி கட்டடங்கள் குலுங்கியுள்ளன. அதனால் பெரும்பாலான கட்டிடங்கள் மற்றும் வீடுகளில் விரிசல் ஏற்பட்டது. இதனால் மக்கள் தெருக்களில் தஞ்சம் அடைந்தனர். இந்த நிலநடுக்கம் சிலநிமிடங்கள் நீடித்ததாக மக்கள் தெரிவித்தனர்.

இந்த நிலநடுக்கம் மக்கள் தொகை அதிகமாக உள்ள தவாவ் பகுதிக்கு தெற்கே உள்ளதால், இந்த நிலநடுக்கத்தால் சேதம் குறைவாக இருக்கும் என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுவரை இந்த நிலநடுக்கத்தால் ஆன சேதம் குறித்து தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை. மேலும் சுனாமி எச்சரிக்கையும் விடப்படவில்லை.