100 கோடி நஷ்ட ஈடு! 24 மணி நேரத்தில் அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும்! திமுக ஆர்எஸ் பாரதி நோட்டீஸ்!

100 கோடி நஷ்ட ஈடு! 24 மணி நேரத்தில் அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும்! திமுக ஆர்எஸ் பாரதி நோட்டீஸ்!
100 கோடி நஷ்ட ஈடு! 24 மணி நேரத்தில் அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும்! திமுக ஆர்எஸ் பாரதி நோட்டீஸ்!
100 கோடி நஷ்ட ஈடு! 24 மணி நேரத்தில் அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும்! திமுக ஆர்எஸ் பாரதி நோட்டீஸ்!
100 கோடி நஷ்ட ஈடு! 24 மணி நேரத்தில் அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும்! திமுக ஆர்எஸ் பாரதி நோட்டீஸ்!

சென்னை: முதல்வர் ஸ்டாலினின் துபாய் பயணம் பற்றி அவதூறு பரப்பியதாக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எதிராக திமுக அமைப்புச் செயலாளர் ஆர். எஸ் பாரதி சார்பாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

துபாயில் நடக்கும் உலக அளவிலான எக்ஸ்போவில் தமிழ்நாட்டின் அரங்கை திறந்து வைப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் துபாய் சென்றுள்ளார். 4 நாள் பயணமாக முதல்வர் ஸ்டாலின் துபாய் மற்றும் அபுதாபி சென்றுள்ளார்.

நேற்று துபாய் எக்ஸ்போவை முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டார். பின்னர் பல்வேறு தொழிலதிபர்களை முதல்வர் ஸ்டாலின் சந்தித்தார். இன்றும் பல்வேறு தொழிலதிபர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.

துபாய் சென்ற முதல்வர் ஸ்டாலினை இந்திய தூதர் ஜெனரல் அமீர் பூரி மற்றும் அமீரக அமைச்சர்கள் விமான நிலையத்தில் வரவேற்றனர். முதல்வர் ஸ்டாலினின் இந்த பயணத்தில் தமிழ்நாட்டிற்கான பல்வேறு முதலீடுகள் ஈர்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே லூலூ குழுமம் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய உள்ளதாக தகவல்கள் வருகின்றன. அதோடு பல துபாய் நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

நம்பர்-1 தமிழ்நாடு என்ற இலக்கை நோக்கி எடுத்து வரும் முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த சந்திப்புகள் நடப்பதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இன்றும் பல்வேறு துபாய் தொழிலதிபர்கள், இந்தியாவை பூர்வீகமாக கொண்ட தொழிலதிபர்களுடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு நடத்தியது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் 5 ஆயிரம் கோடி ரூபாய் துபாய்க்கு கொண்டு சென்றுள்ளதாக பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை குற்றஞ்சாட்டி உள்ளார்.

துபாயில் நடைபெறும் விழாவில் தமிழகம் சார்பிலான அரங்கைத் திறந்துவைக்க ஏன் இவ்வளவு பணம்? துபாய் பயணத்தின் மர்மம் என்ன? என்று பாஜக அண்ணாமலை கேள்வி எழுப்பி இருந்தார். அதோடு சொந்த முதலீட்டை செய்வதற்காக திமுக இந்த பயணத்தை மேற்கொள்கிறதா என்றும் பாஜக தலைவர்கள் கேள்வி எழுப்பி இருந்தனர். இந்த நிலையில்தான் முதல்வரின் துபாய் பயணத்தை விமர்சிப்பதா? என்று கூறி அண்ணாமலைக்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கண்டனம் தெரிவித்துள்ளார்.

அதோடு அண்ணாமலை மன்னிப்பு கோர வேண்டும்; இல்லாவிடில் கிரிமினல் வழக்கு தொடரப்படும். அவருக்கு 24 மணி நேரம் மட்டுமே அவகாசம். அதற்குள் மன்னிப்பு கோர வேண்டும். இலையென்றால் கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்படும். அதோடு அவர் 100 கோடி ரூபாய் நஷ்ட ஈட்டு தொகையை தமிழ்நாடு அரசின் நிவாரண நிதிக்கு நஷ்ட ஈடாக கொடுக்க வேண்டும் என்று ஆர்.எஸ்.பாரதி தனது நோட்டீஸில் குறிப்பிட்டுள்ளார்.