அமேசான், பிளிப்கார்ட் சலுகை விற்பனையில் விதிமீறல்?

அமேசான், பிளிப்கார்ட் சலுகை விற்பனையில் விதிமீறல்?

 

அமேசான், பிளிப்கார்ட் இணையதளங்களின் ஆன்லைன் சலுகை விற்பனைகளின்போது அந்நிய முதலீட்டு விதிகள் மீறப்பட்டதா என அரசு விசாரிக்க உள்ளதாக வர்த்தகத்துறை அமைச்சகத்தில் இருந்து தகவல் கிடைத்துள்ளது.

சிறு அளவிலான சில்லறை விற்பனை செய்துவரும் 13 கோடி வியாபாரிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, ஆன்லைன் விற்பனையில் பெரிய சலுகைகள் அளிப்பது குறித்து பிப்ரவரி மாதம் புதிய விதி ஒன்று கொண்டுவரப்பட்டது. இதனால், இணைய வர்த்தக நிறுவனங்கள் தங்கள் தொழில்முறையை மாற்றி அமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

இந்நிலையில் உள்நாட்டு விற்பனையாளர்கள் அமேசான் மற்றும் பிளிப்கார்ட் நிறுவனங்கள் மீது விதிமீறல் புகார் அளித்துள்ளனர். குறிப்பாக, சமீபத்திய பண்டிகைக் கால சலுகை விற்பனையின்போது இத்தகைய விதிமீறல் குறித்த புகார் அதிகமாக வந்துள்ளதாக வர்த்தகத்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

சுமார் 7 கோடி உள்நாட்டு சிறு விற்பனையாளர்களின் அமைப்பான, அனைத்து இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு அளித்த புகாரை வர்த்தக அமைச்சகம் ஆராய்ந்தது. அவர்கள் அமேசான் மற்றும் பிளிப்கார்ட் ஆகியவை இந்தியாவின் அந்நிய முதலீட்டு விதிகளை மீறுவதாக குற்றம்சாட்டியுள்ளர் என்றும் அந்த அதிகாரி கூறியிருக்கிறார்.