பஞ்சமி நிலத்தை உரியவர்களிடம் ஒப்படைக்காவிட்டால் மிகப்பெரிய அளவில் போராட்டம்- பொன்.ராதாகிருஷ்ணன்

பஞ்சமி நிலத்தை உரியவர்களிடம் ஒப்படைக்காவிட்டால் மிகப்பெரிய அளவில் போராட்டம்- பொன்.ராதாகிருஷ்ணன்

பஞ்சமி நிலத்தை உரியவர்களிடம் ஒப்படைக்காவிட்டால் மிகப்பெரிய அளவில் போராட்டம் வெடிக்கும் என்று பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

முன்னாள்மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் இருப்பதாக வைகோ ஏற்கனவே ஆதாரத்தை காட்டியுள்ளார். அலுவலகம் இருக்குமிடம் பஞ்சமி நிலம் என்றால் அதை உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டியது அவர்களுடைய கடமை.

ரஜினி கட்சி ஆரம்பித்தாலும் சரி, ஆரம்பிக்காவிட்டாலும் சரி, காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவிலும் எதிர்காலம் இருக்காது என்று பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.