இந்திய போன்களுக்குள் வாட்ஸ் அப் மூலம் ஊடுருவிய இஸ்ரேலிய ஸ்பைவேர் !!
இஸ்ரேல் ஸ்பைவேர் சாஃப்டவேர் மூலம் இந்தியாவில் உள்ள பத்திரிகையாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் போன்ற பலர் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து ஆய்கையில் முக்கிய பத்திரிகையாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், மூத்த அரசு அதிகாரிகள் உள்ளிட்டவர்களின் போன்களுக்குள் வாட்ஸ் அப் மூலம் இஸ்ரோலிய ஸ்பைவேர் ஊடுருவியது தெரிய வந்துள்ளது.
இதனால் பேஸ்புக் இஸ்ரேலிய சைபர் செக்யூரிட்டி நிறுவனமான என்எஸ்ஓ மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதன்படி 20 நாடுகளில் உள்ள பத்திரிகையாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், மூத்த அரசு அதிகாரிகளின் வாட்ஸ் அப் சர்வரை பயன்படுத்தியது தெரியவந்துள்ளது.