அரசு மருத்துவர்கள் வேலைநிறுத்தம் தற்காலிக வாபஸ்

அரசு மருத்துவர்கள் வேலைநிறுத்தம் தற்காலிக வாபஸ்
அரசு மருத்துவர்கள் வேலைநிறுத்தம் தற்காலிக வாபஸ்

சென்னை: 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற அரசு மருத்துவர்கள் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்படுவதாக மருத்துவர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் 18 ஆயிரம் அரசு மருத்துவர்கள் பணியாற்றி வருகிறார்கள்.

இதில் ஒரு சங்கத்தை தவிர்த்து ஏனைய டாக்டர்கள் சங்கங்கள் இணைந்து கடந்த 25-ந்தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

காலமுறை ஊதியமும், பிற மாநிலங்களுக்கு இணையான ஊதிய உயர்வும் வழங்க வேண்டும் என்பது உள்பட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலைநிறுத்தம் நடந்தது.

இந்நிலையில் அரசு மருத்துவர்களின் வேலைநிறுத்தம் தற்காலிக வாபஸ் பெறப்பட்டுள்ளது. இதனை சென்னையில் அரசு மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் லட்சுமி நரசிம்மன் அறிவித்தார். அப்போது அவர் கூறியதாவது:

தமிழகத்தில் 8 நாளாக நடந்த அரசு மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பின் வேலைநிறுத்தம் தற்காலிக வாபஸ் பெறப்பட்டுள்ளது.