அயோத்தி நில வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

அயோத்தி நில வழக்கில் உச்ச நீதிமன்றம்  தீர்ப்பு
அயோத்தி நில வழக்கில் உச்ச நீதிமன்றம்  தீர்ப்பு

அயோத்தி நில வழக்கில் 5 நீதிபதிகளும் ஒரே தீர்ப்பு :அயோத்தி நில வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு விவரத்தை வெளியிட்டுள்ளது. அதில், ” ஒருவரின் மத நம்பிக்கையில் மற்றொருவரின் மத நம்பிக்கை தலையிட முடியாது . அயோத்தியில் பாபரால் மசூதி கட்டப்பட்டதை உச்சநீதிமன்றம் ஏற்று கொள்கிறது. சர்ச்சைக்குரிய இடத்தில் 1949-ல் ராமர் சிலை வைக்கப்பட்டது. ராம்லல்லா அமைப்புக்கு மட்டுமே நீதிமன்றத்தில் வழக்கு தொடர அதிகாரம் உள்ளது. இந்து அமைப்பான நிர்மோகி அகாரா தாக்கல் செய்த மனு மிகவும் தாமதமானது. அயோத்தியில் பாபர் மசூதி காலி மனையில் கட்டப்பட்டதாக கூறப்படுவது தவறு. அயோத்தியில் பாபர் மசூதி கட்டப்படுவதற்கு முன் அங்கு இஸ்லாமிய கட்டடங்கள் எதுவும் இல்லை. ” என்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அயோத்தியில் பாபர் மசூதி கட்டப்படுவதற்கு முன்கோயில்கள் இருந்தது உறுதி செய்யப்படவில்லை :அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம், ” இந்திய தொல்லியல் துறையின் அறிக்கையை நிராகரிக்க முடியாது. பாபர் மசூதிக்கு முன்பு அங்கு இருந்தது இஸ்லாமிய கட்டிடம் அல்ல. அயோத்தியில் பாபர் மசூதி கட்டப்படுவதற்கு முன் அங்கு கோயில்கள் இருந்தது உறுதி செய்யப்படவில்லை ” என்று தெரிவித்துள்ளது.

பாபரால் மசூதி கட்டப்பட்டதை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டது:சர்ச்சைக்குரிய இடத்தில் 1949ல் ராமர் சிலை வைக்கப்பட்டது. ஒருவரின் மத நம்பிக்கையில் மற்றொருவரின் மத நம்பிக்கை தலையிட முடியாது. நிர்மோகி அகாரா ஒரு நிர்வாக அமைப்பு தான். நிர்மோகி அகாராவுக்கு தர்மகர்த்தா உரிமை கிடையாது என்றும் அயோத்தியில் பாபரால் மசூதி கட்டப்பட்டுள்ளது என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

அயோத்தி வழக்கில் ஷியா அமைப்பு தொடர்ந்த வழக்கு தள்ளுபடி :அயோத்தி வழக்கில் 5 நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்பு வழங்கவுள்ளது. இதில் ஷியா அமைப்பு தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்ற அமர்வு தள்ளுபடி செய்து தீர்ப்பளித்துள்ளது.

அயோத்தி வழக்கு தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்:

  • பாபர் மசூதி பாபர் ஆட்சி காலத்தில் தான் கட்டப்பட்டது என்பதை ஏற்று கொள்கிறோம். பாபர் மசூதி எப்போது கட்டப்பட்டது என்பதற்கு துல்லியமான ஆதாரம் இல்லை. மதச்சார்பின்மையே அரசியல் சாசனத்தின் அடிப்படை பண்பு. நிர்மோகி அஹாரா மனுவில் ஆதாரங்கள் இருப்பதாக தெரியவில்லை. விசாரணைக்குஉகந்தது இல்லை.
  • அமைதியை காக்கவும் பாதுகாப்பை பராமரிக்கும் வகையில் அயோத்தி தீர்ப்பை ஏற்று கொள்ள வேண்டும். நீதிமன்றம் நடுநிலையை காக்கும் பொறுப்பில் இருக்கிறது. காலி இடத்தில் பாபர் மசூதி கட்டப்படவில்லை. இந்திய தொல்லியல் துறை கொடுத்துள்ள ஆதாரங்கள் ஆராயப்பட்டன
  • 12வது நூற்றாண்டில் கட்டப்பட்ட கோவில் இருந்ததாக இந்திய தொல்லியல் துறை கூறுகிறது. தொல்லியல் துறை ஆய்வறிக்கையை நிராகரிக்க முடியாது, ராமர் நம்பிக்கை கேள்விக்கு இடமில்லை. அயோத்தியில், ராமர் பிறந்த இடமாக ஹிந்துக்கள் நம்பிக்கை.
  • ராமர் தொடர்பான ஹிந்துக்களின் நம்பிக்கை, சர்ச்சை மற்றும் விவாதத்திற்கு அப்பாற்பட்டது. சட்டத்தின் அடிப்படையில் தான் நிலத்திற்கு உரிமை கோர முடியும். ஆவணப்படி அயோத்தி நிலம் அரசுக்கே. மத நம்பிக்கை என்பது குடிமகனின் அடிப்படை உரிமை சர்ச்சை கட்டடம் இஸ்லாமிய முறையில் இல்லை. இவ்வாறு தலைமை நீதிபதி கூறினார்.