சென்னையில் பெய்து வரும் கனமழை- பள்ளிகள் வழக்கம்போல் இயங்குகின்றன

சென்னையில் பெய்து வரும் கனமழை- பள்ளிகள் வழக்கம்போல் இயங்குகின்றன

சென்னை:வளி மண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், சென்னை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இன்று அதிகாலை முதல் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது. எனினும், சென்னையில் வழக்கம்போல் பள்ளிகள் இயங்கும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.