பகல் இரவு டெஸ்ட் போட்டி வழக்கமாகி விட கூடாது : கேப்டன் விராட் கோலி கருத்து

பகல் இரவு டெஸ்ட் போட்டி வழக்கமாகி விட கூடாது : கேப்டன் விராட் கோலி கருத்து
பகல் இரவு டெஸ்ட் போட்டி வழக்கமாகி விட கூடாது : கேப்டன் விராட் கோலி கருத்து

கொல்கத்தா:இந்தியா வங்கதேச அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி இன்று நடைபெறுகிறது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறுமு இந்த போட்டி வரலாற்றில் முதல் முறையாக பகல் இரவு டெஸ்ட் போட்டியாக நடைபெறுகிறது.

இந்நிலையில், இந்திய முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் சொன்னது போல், இந்தியாவில் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு என்று நிரந்தரமான போட்டி அட்டவணை இருக்க வேண்டும். அப்போது தான் டெஸ்ட் போட்டியை பார்க்க ரசிகர்கள் திட்டமிட்டு முன்கூட்டியே தயாராவார்கள்.

இதே போல் பகல்-இரவு டெஸ்ட் எப்போதாவது இருக்கலாம். அதுவே வழக்கமான நடைமுறையாகி விடக்கூடாது. எப்போதெல்லாம் பகல்-இரவு டெஸ்டுக்கு ஏற்பாடு செய்யப்படுகிறதோ, அதற்கு முன்பாக முறையான பயிற்சி ஆட்டம் இருக்க வேண்டும். அப்போது தான் விளையாட முடியும் என இந்திய அணி கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.