முந்தைய உள்ளாட்சி தேர்தல்கள் போல இல்லாமல் புதிய நடைமுறையை கொண்டுவரும் தேர்தல் ஆணையம்.!

உள்ளாட்சி தேர்தலை இரண்டு கட்டமாக நடத்த தேர்தல் ஆணையம் பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் தேர்தல் தேதியை வரும் டிசம்பர் 2ந் தேதி தெரிவிப்பதாக சமீபத்தில் மாநில தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் கூறியிருந்தது. இதையடுத்து உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான பணியில் மாநில தேர்தல் ஆணையம் மும்புரமாக ஈடுபட்டு வருகிறது.

இதற்கிடையே, மாநகராட்சி மேயர், நகராட்சி தலைவர், மாவட்ட பஞ்சாயத்து தலைவர், பேரூராட்சி தலைவர், ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடைபெறும் என கடந்த வாரம் தமிழக அரசு அறிவித்தது.

இதனால், கிராமப்புறம் மற்றும் சென்னை உள்ளிட்ட நகர்ப்புறங்களுக்கு தனித்தனியே உள்ளாட்சி தேர்தலை நடத்தலாமா? என மாநில தேர்தல் ஆணையம் அலோசனை வருவதாக சொல்லப்படுகிறது.

டிசம்பர் மாத இறுதியில் பஞ்சாயத்துகளுக்கான தேர்தலையும், ஜனவரி மாத தொடக்கத்தில் மாநகராட்சி மற்றும் நகராட்சிகளுக்கான தேர்தலை இரண்டு கட்டமாக தேர்தல் நடத்துவது தொடர்பாக மாவட்ட ஆட்சியர், மாநில தேர்தல் அதிகாரிகளுடன் மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி ஆலோசனை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.