சற்றே குறைந்தது வெங்காய விலை !
சென்னை: கோயம்பேடு சந்தையில் பெரிய வெங்காயம் கிலோ 80 ரூபாயாக குறைந்துள்ளது. சின்ன வெங்காயம் விலை தொடர்ந்து அதிகமாகவே இருந்து வருகிறது.
முதல் ரக சின்ன வெங்காயம் கிலோ 140 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. வெங்காய உற்பத்தியில் முன்னணியில் இருக்கும் மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் மழையால் விளைச்சல் பாதிக்கப்பட்டு வரத்து குறைந்ததே விலை ஏற்றத்துக்கு காரணம் என கூறப்படுகிறது. கடந்த சில நாட்களாக ஏறுமுகத்தில் இருந்த வெங்காயத்தின் விலை தற்போது சற்று குறைந்துள்ளது.