செம்பரம்பாக்கம் ஏரி தண்ணீரில் நச்சுத்தன்மை எதுவும் இல்லை - குடிநீர் வாரிய அதிகாரிகள் தகவல்
சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் முக்கிய ஏரியாக செம்பரம்பாக்கம் ஏரி உள்ளது. தற்போது பெய்து வரும் பருவமழை காரணமாக வறண்டு கிடந்த செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. இப்போது ஏரியில் 1154 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது.
இதையடுத்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் செம்பரம்பாக்கம் ஏரி தண்ணீரை மாதிரி எடுத்து பரிசோதனைக்காக தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்தனர். ஆய்வின் முடிவில் அந்த தண்ணீரில் நச்சுத்தன்மை எதுவும் இல்லை என்பது தெரியவந்துள்ளது. குறிப்பிட்ட அளவில் மட்டுமே பயோ கெமிக்கல் ஆக்சிஜன் அளவு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். இந்த தகவலை குடிநீர் வாரிய அதிகாரிகள் உறுதிப்படுத்தி உள்ளனர்.