இந்தியா கொண்டுவந்துள்ள குடியுரிமை சட்டத்திருத்த மசோதா குறித்து கருத்து தெரிவிக்க ஐக்கிய நாடுகள் சபை மறுப்பு!
நியூயார்க்: இந்தியா கொண்டுவந்துள்ள குடியுரிமை சட்டத்திருத்த மசோதா குறித்து கருத்து தெரிவிக்க ஐக்கிய நாடுகள் சபை மறுப்பு தெரிவித்துள்ளது. பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து கடந்த 2014ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி வரை இந்தியா வந்து தங்கிய இந்துக்கள், சீக்கியர்கள், புத்தமதத்தினர், ஜெயின்கள், பார்சி இனத்தவர் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு இந்திய குடியுரிமை அளிக்கப்படும் என கடந்த 2 மக்களவை தேர்தலிலும் பா.ஜ வாக்குறுதி அளித்திருந்தது. இவர்கள் அனைவரும் அண்டை நாடுகளில் மதரீதியான துன்புறுத்தல்களை சந்தித்ததால் இந்தியாவில் குடியேறிவர்கள்.
இது போன்று வெளிநாட்டில் இருந்து வரும் அகதிகள் 11 ஆண்டுகளாக இந்தியாவில் வசித்திருந்தால் மட்டுமே முன்பு குடியுரிமை வழங்கப்பட்டது. இதில் தற்போது திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அண்டை நாடுகளில் மதரீதியான துன்புறுத்தல்களுக்கு ஆளான முஸ்லிம் அல்லாத அகதிகள், 5 ஆண்டுகள் இந்தியாவில் இருந்தால், அவர்கள் குடியுரிமை வழங்கும் விதத்தில் சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.
இவர்களில் யாராவது சட்ட விரோத குடியேறிகளாக அடையாளம் காணப்பட்டு அவர்கள் இந்தியாவில் வழக்கை சந்தித்திருந்தால், அவர்களுக்கு இந்த மசோதா பாதுகாப்பு அளிக்கும். இந்த குடியுரிமை திருத்த மசோதாவை மக்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிமுகம் செய்தார்.
ஏறக்குறைய 9 மணிநேரம் நீண்ட விவாதத்துக்குப்பின் மசோதா நள்ளிரவில் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு ஆதரவாக 311 உறுப்பினர்களும், எதிராக 80 உறுப்பினர்களும் வாக்களித்தனர். இந்த நிலையில், குடியுரிமை திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளதற்கு, ஆதரவாவும், எதிராகவும் கருத்துகள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், தெரிவித்துள்ளனர்.
இது குறித்து ஐ.நா.விற்கான அகதிகள் மறுவாழ்வு அமைப்பு கருத்து கூற மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐ.நா. பொதுச்செயலாளரின் துணை செய்தி தொடர்பாளர் கூறியது, இந்தியா கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டம் அவர்களது உள்நாட்டு விவகாரம். இதில் நாம் கருத்து சொல்ல முடியாது, என்று அவர் கூறியுள்ளார்.