டி20 கிரிக்கெட்டில் உலக சாதனை படைத்த தீபக் சஹார்

டி20 கிரிக்கெட்டில் உலக சாதனை படைத்த தீபக் சஹார்

நாக்பூர்:இந்தியா வங்கதேச அணிகளுக்கு இடையிலான கடைசி டி20 தொடரில் இந்திய அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் அபாரமாக பந்து வீசிய இந்திய வீரர் தீபக் சஹார், சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட் வரலாற்றில் 'ஹாட்ரிக்' விக்கெட் வீழ்த்தியதுடன், இந்த ஆட்டத்தில் அவர் 3.2 ஓவர்கள் பந்து வீசி 7 ரன் மட்டுமே வழங்கி 6 விக்கெட்டுகளை வீழ்த்தி உலக சாதனை படைத்துள்ளார்.

சர்வதேச டி20 போட்டியில் ஒரு பவுலரின் சிறந்த பந்து வீச்சாக இது பதிவாகியுள்ளது. இதற்கு முன்பு இலங்கையின் அஜந்தா மென்டிஸ் 2012-ம் ஆண்டு ஜிம்பாப்வேக்கு எதிரான ஆட்டத்தில் 8 ரன் விட்டுக்கொடுத்து 6 விக்கெட் எடுத்ததே சிறந்த பந்து வீச்சாக இருந்தது.