டி20 கிரிக்கெட்தொடர் - வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது இந்தியா

டி20 கிரிக்கெட்தொடர் - வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது இந்தியா
டி20 கிரிக்கெட்தொடர் - வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது இந்தியா
டி20 கிரிக்கெட்தொடர் - வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது இந்தியா

மும்பை:இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 3-வது டி20 கிரிக்கெட் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் பொல்லார்டு பந்து வீச்சை தேர்வு செய்தார்.

இந்திய அணியின் சார்பில் ரோகித் சர்மா, கே.எல்.ராகுல் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். ரோகித் சர்மா 34 பந்துகளில் 5 சிக்சர், 6 பவுண்டரி என 71 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். ரிஷப் பந்த் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.

மறுபுறம் ராகுலும், கேப்டன் விராட் கோலியும் தங்களது அதிரடியை தொடர்ந்ததால் இந்திய அணியின் ரன் வேகம் கணிசமாக உயர்ந்தது. கே.எல்.ராகுல் 56 பந்தில் 91 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியில், இந்திய அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுக்கு 240 ரன்களை எடுத்துள்ளது.

இதையடுத்து, 241 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் களமிறங்கியது. இந்திய அணியினரின் துல்லிய பந்து வீச்சால் முன்னணி பேட்ஸ்மேன்கள் விக்கெட்டுகளை இழந்தனர். ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் பொல்லார்டு சிக்சர்களாக விளாசி அரை சதம் கடந்தார். அவர் 39 பந்துகளில் 6 சிக்சர், 5 பவுண்டரி என 68 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 173 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதையடுத்து 67 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் டி 20 தொடரை 2-1 என கைப்பற்றி கோப்பையை வென்று அசத்தியது இந்தியா.