2020 ஐபிஎல் ஏலத்தில் 971 வீரர்கள் பங்கேற்பு
மும்பை:2020-ம் ஆண்டுக்கான ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் ஏலம் கொல்கத்தாவில் வரும் டிசம்பர் 19-ந் தேதி நடைபெறவுள்ள நிலையில், இந்த ஏலத்தில் இந்திய வீரர்கள் 713, மற்றும் வெளிநாட்டு வீரர்கள் 258 என மொத்தம் மொத்தம் 971 வீரர்கள் பற்கேற்க தங்கள் பெயர்களை பதிவு செய்துள்ளனர். ஆனால் வரும் ஐபிஎல் ஏலத்தில் 73 வீரர்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட உள்ள நிலையில், இந்த வீரர்களில் யாருக்கு வாய்ப்பு கிடைக்கும் என பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது.