5 மற்றும் 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வு: வழிமுறைகள் வெளியீடு
5 மற்றும் 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவதற்கான வழிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.அதில், '5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளியில் இருந்து ஒரு கி.மீ.,க்குள் தேர்வு மையம் அமைக்க வேண்டும். 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 3 கி.மீ.,க்குள் தேர்வு மையம் அமைக்க வேண்டும். தேர்வு மையங்களுக்கு மாணவர்கள் சென்றுவர ஏதுவாக போக்குவரத்து வசதி ஏற்படுத்த வேண்டும். வினாத்தாள், விடைக்குறிப்பு பணிகளை குறுவள மைய அளவிலேயே மேற்கொள்ள வேண்டும்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.5 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 2020 ஏப்ரலில் பொதுத்தேர்வு நடைபெற உள்ளது.