உலகத் தொலைக்காட்சியில் முதன் முறையாக ஏஆர். ரகுமானின் முதல் தயாரிப்பு திரைப்படமான 99 ஸாங்ஸ் (99 Songs) திரைப்படத்தை வரும் ஞாயிறன்று ஒளிபரப்புகிறது கலர்ஸ் தமிழ்
உலகத் தொலைக்காட்சியில் முதன் முறையாக
ஏஆர். ரகுமானின் முதல் தயாரிப்பு திரைப்படமான 99 ஸாங்ஸ் (99 Songs) திரைப்படத்தை வரும் ஞாயிறன்று ஒளிபரப்புகிறது கலர்ஸ் தமிழ்
--------------
சிறப்பு பார்ட்னர் நிப்பான் பெயிண்ட்ஸ் வழங்கும் இத்திரைப்படத்தை 2021 ஆகஸ்ட் 22 அன்று கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் மட்டும் பிற்பகல் 1.00 மற்றும் மாலை 4.00 மணிக்கு ஒளிபரப்பாகிறது
சென்னை, 20 ஆகஸ்ட் 2021: தமிழகத்தின் சிறந்த பொழுதுபோக்கு சேனலான கலர்ஸ் தமிழ், இந்த வார இறுதி நாட்களில் மூவி ஆஃப் தி மன்த் (movie of the month)-ன் ஒரு பகுதியாக இந்த ஆண்டில் அதிக எதிர்பார்ப்புகளை பெற்றிருக்கும் இசை சார்ந்த திரைப்படமான ஏஆர். ரகுமானின் 99 ஸாங்ஸ் (99 Songs) திரைப்படத்தை தொலைக்காட்சி திரைகளுக்கே கொண்டு வரவிருக்கிறது. அழகிய காட்சிகளையும், இசையையும் கொண்டு உருவாகி இருக்கும் இத்திரைப்படத்தை, கண்டு மகிழ தயாராக இருங்கள். காதல், சோகம், ஈர்ப்பு மற்றும் மனதை கவரும் கதைக்களத்தோடு உங்களை மெய்மறக்கச் செய்யும் இசையோடு வெளிவரவிருக்கும் ஏஆர். ரகுமானின் YM பேனர்ஸின் கீழ் முதல் தயாரிப்பான 99 ஸாங்ஸ் (99 Songs) திரைப்படம் சண்டே சினி ஜம்போ – ன் ஒரு அங்கமாக ஒளிபரப்பப்பட உள்ளது. 2021 ஆகஸ்ட் 22, இந்த ஞாயிறன்று பிற்பகல் 1.00 மணி மற்றும் 4.00 மணிக்கு இத்திரைப்படத்தை கண்டு ரசிக்க கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியை மறவாமல் டியூன் செய்யுங்கள்.
தான் நேசிக்கின்ற இளம் பெண்ணை திருமணம் செய்வதற்கு முன்பு, 100 பாடல்களை எழுதவேண்டும் என்ற சவாலுக்கு உட்படுத்தப்பட்ட இசையில் பேரார்வம் கொண்ட இசைக்கலைஞரான ஜே (எஹான் பட் – ன் நடிப்பில்) என்ற கதாபாத்திரத்தைச் சுற்றி இதன் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. காட்சிகளின் மூலம் கதையை மிக நேர்த்தியாக சொல்கின்ற 99 ஸாங்ஸ் (99 Songs) திரைப்படப் பாடல்கள் இசையை ரசிகர்களுக்கு சிறப்பானவை. இசையின் நேர்த்தியை இன்னும் உச்சத்திற்கு எடுத்துச்செல்லும் வகையில் பென்னி தயாள், ஸ்வேதா மோகன், அரிஜித் சிங் உட்பட, பல பிரபல இந்திய இசை உலக நட்சத்திரங்கள் பலரால் இத்திரைப்படத்தின் பின்னணி இசை பாடப்பட்டிருக்கிறது.
இந்த முதல் அறிமுக நிகழ்வு குறித்துப் பேசிய இசைப்புயல் ஏஆர். ரகுமான், “எனது திரைப்படமான 99 ஸாங்ஸ் (99 Songs), கலர்ஸ் தமிழ் போன்ற தமிழகத்தின் பிரபல சேனலில் ஒளிபரப்பப்படவிருக்கிறது என்று அறிந்து நான் மிகவும் உற்சாகமும், ஆனந்தமும் கொண்டிருக்கிறேன். YM பேனர்ஸின் கீழ் தயாரிக்கப்படும் எனது முதல் திரைப்படமாக இது இருப்பதால், பார்வையாளர்களும், ரசிகர்களும் இந்த திரைப்படமாக்கல் அனுபவத்தை எந்த அளவிற்கு அனுபவித்து ரசிக்கவிருக்கின்றனர் என்று அறிய மிகவும் ஆர்வத்தோடும், எதிர்பார்ப்போடும் நான் இருக்கிறேன். 99 ஸாங்ஸ் (99 Songs), திரைப்படத்திற்கான பாடல்களை எழுதுவது ஒரு இசைக்கலைஞராக எனது இசை திறனை மேலும் உயர்த்தி அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்ல உதவியிருக்கிறது. இத்திரைப்படத்தை ரசித்து, அனுபவிப்பதோடு, இப்பாடல்களின் இசையையும் உணர்ந்து இனிய அனுபவம் பெறுவார்கள் என்று நான் நம்புகிறேன்.” என்று கூறினார்.
ஏஆர். ரகுமானின் உள்ளத்தை வருடும் பின்னணி இசையை அனுபவிப்பதோடு, தனது வாழ்க்கையின் உயிர் துடிப்பான காதலியோடு ஜே இணைய முடிகிறதா என்று அறிய இந்த ஞாயிறு, 2021 ஆகஸ்ட் 22, பிற்பகல் 1.00 மணி மற்றும் மாலை 4.00 மணிக்கு தவறாமல் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியை டியூன் செய்யுங்கள். அனைத்து முன்னணி கேபிள் வலையமைப்புகளிலும் மற்றும் சன் டைரக்ட் (CHN NO 128), டாடா ஸ்கை (CHN NO 1555), ஏர்டெல் (CHN NO 763), டிஷ் டிவி (CHN NO 1808) மற்றும் வீடியோகான் D2H (CHN NO 553) ஆகிய அனைத்து டிடீஹெச் தளங்களிலும் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைக் கண்டு ரசிக்கலாம். தங்களது சௌகரியத்திற்கேற்றவாறு எந்த நேரத்திலும் இத்திரைப்படங்களைக் காண VOOT – ஐ பார்வையாளர்கள் டியூன் செய்யலாம்.
கலர்ஸ் தமிழ் குறித்து: 2018 பிப்ரவரி மாதத்தில் தொடங்கப்பட்ட கலர்ஸ் தமிழ், வயாகாம்18 குடும்பத்திலிருந்து வெளிவந்திருக்கின்ற புதிய, குடும்ப பொழுதுபோக்கு சேனலாகும். பெண்களையும் மற்றும் அவர்களது குடும்பங்களையும் கொண்டாடுகிற, உத்வேகமளிக்கிற, உணர முற்படுகிற தனித்துவமான, வலுவான கதையம்சம் கொண்ட நிகழ்ச்சிகளின் மூலம் உலகெங்கும் வாழ்கிற தமிழ் பேசும் பார்வையாளர்களை மகிழ்விப்பதே இந்த சேனலின் நோக்கமாகும். 'இது நம்ம ஊரு கலரு” என்ற விருதுவாக்குடன் களமிறங்கியிருக்கிற கலர்ஸ் தமிழ், கதை சொல்வது மீது முதன்மையான கவனத்தை செலுத்தும் தரமான, புதுமையான நிகழ்ச்சி அமைப்புகளின் வழியாக சிறப்பான பாரம்பரியம் கொண்ட தமிழ்நாடு கலாச்சாரத்தை அடிப்படையாகக் கொண்டதாக இதன் நிகழ்வுகள் இருக்கும். வேலுநாட்சி, ஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை, கலர்ஸ் சூப்பர் கிட்ஸ் மற்றும் ஒரு கதை பாடட்டுமா என்பவை எங்களது சேனலில் ஒளிபரப்பான பிரபல வரவேற்பு பெற்ற நிகழ்ச்சிகளாகும். வேலு நாச்சி, ஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை, டான்ஸ் Vs டான்ஸ், கலர்ஸ் காமெடி நைட்ஸ், ஓவியா, சிவகாமி, வந்தாள் ஸ்ரீதேவி, பேரழகி மற்றும் திருமணம், தறி மற்றும் மலர் போன்ற சமூக – குடும்ப நெடுந்தொடர்கள் தற்போது ஒளிபரப்பாகி வருகிற, ரசிகர்களின் பேராதரவை பெற்ற நிகழ்ச்சிகளுள் சிலவாகும்.
வயாகாம்18 குறித்து: வயாகாம்18 மீடியா பிரைவேட் லிமிடெட்., இந்தியாவில் அதிவேகமாக வளர்ச்சியடைந்துவரும் என்டர்டெயின்மென்ட் வலையமைப்புகளுள் ஒன்றாகும். பல செயல்தளங்களில் பல தலைமுறைகளுக்கான பல கலாச்சார பிராண்டு அனுபவங்களை வழங்கி வருகிற வலுவான பிராண்டுகளின் தாயகமாக இது திகழ்கிறது. 51% பங்குகளை கொண்டிருக்கும் டிவி18 மற்றும் 49% பங்குகளை கொண்டிருக்கும் வயாகாம்18 ஆகிய இரு பெருநிறுவனங்களின் கூட்டுமுயற்சி நிறுவனமான வயாகாம்18, சினிமா வழியாகவும் மற்றும் ஆன்லைன், வானொலி மற்றும் களஅளவில் கொண்டிருக்கும் தனது ஆதாரவளங்களின் மூலமாக கோடிக்கணக்கான மக்களை சென்றடைவதன் மூலம் இந்தியாவின் கேளிக்கை மற்றும் பொழுதுபோக்கை வரையறை செய்கிறது.