அபினந்தனை வரவேற்க அவரது பெற்றோர், மனைவி டெல்லி விரைந்தனர்

அபினந்தனை வரவேற்க அவரது பெற்றோர், மனைவி டெல்லி விரைந்தனர்

புதுடெல்லி: இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் இன்று (வெள்ளிகிழமை) விடுதலை செய்யப்பட்டு, இந்தியாவிடம் முறைப்படி ஒப்படைக்கப்படுகிறார். அவர் இஸ்லாமாபாத்தில் இருந்து லாகூர் அழைத்துச்செல்லப்பட்டு அங்கிருந்து இந்தியாவுக்கு விமானம் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறார். அவர் மும்பை அல்லது டெல்லி வந்து சேருவார் என தகவல்கள் கூறுப்படுகிறது.

இதனையடுத்து விடுதலையாகி வரும் தனது மகனை வரவேற்பதற்காக அபிநந்தனின் தந்தை வர்தமான், தாயார் டாக்டர் ஷோபா, சித்தப்பா டாக்டர் பிரசாத் அஜித், அவரது மனைவி உஷா, உறவினர் அசோக் பானுகுமார் ஆகியோர் சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லிக்கு நேற்று இரவு 10.35 மணிக்கு விமானம் மூலம் புறப்பட்டு டெல்லி சென்று அடைந்தனர்.