அறுவைச்சிகிச்சை மேற்கொள்ளாமலேயே 3 வயது குழந்தையின் உயிரை காப்பாற்றிய அப்பல்லோ மருத்துவமனை
சென்னை, 7 மே 2019: கல்லீரல் செயலிழப்பினால் பாதிக்கப்பட்டு உயிருக்குப் போராடும் நோயாளிகளுக்கு கல்லீரல் மாற்று அறுவைச்சிகிச்சை, மறுவாழ்வு அளிக்கும் ஒரு வரமாகவே இருந்து வருகிறது. சென்னை அப்பல்லோ குழந்தைகள் மருத்துவமனை, எதிர்பாராமல் ஏற்பட்ட கல்லீரல் செயலிழப்பினால் உயிருக்குப் போராடிய 3 வயதான ராதேஷ் என்ற சிறுவனுக்கு, கல்லீரல் மாற்று அறுவைச்சிகிச்சையை மேற்கொள்ளாமலேயே உயிரைக் காப்பாற்றியிருக்கிறது.
உயிருக்கு ஆபத்தான கல்லீரல் செயலிழப்பினால் பாதிக்கப்படும் குழந்தைகள் (இது ஃபல்மினென்ட் லிவர் ஃபெயிலியர் [fulminant liver failure] எனவும் அழைக்கப்படுகிறது), அவர்களுக்குப் பொருந்துகிற கல்லீரலை தானமாக பெறும் வரை காத்திருப்பது சாத்தியமில்லை. பெரும்பாலான சந்தர்ப்பங்களில், இவர்கள் அதிக பாதிப்பை உண்டாக்கும் மூளை வீக்கம், அதிகப்படியான இரத்த கசிவு அல்லது உயிரைப் பறிக்கும் தொற்றுகளால் அவதிப்பட நேரிடும். இதனால் தீடீர் கல்லீரல் செயலிழப்பு ஏற்பட்ட நாள் அல்லது இரண்டாவது நாளுக்குள் கல்லீரல் மாற்று அறுவைச்சிகிச்சை மேற்கொள்ளப்படாவிட்டால், அவர்கள் தங்கள் உயிரை இழக்க நேரிடும். கல்லீரல் செயலிழப்பினால் பாதிக்கப்பட்டவர்கள் அவர்களுக்குப் பொருந்துகிற கல்லீரலை தானமாக பெறும்வரை காத்திருப்பதும் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும்.
சமீபத்தில், 3 வயதான ராதேஷ் என்ற சிறுவனுக்கு தீடீர் காய்ச்சல் ஏற்பட்டது. அது அவருடைய உயிரையே பறிக்குமளவுக்கு தீவிரமான காய்ச்சலாக இருந்தது. மிகவும் சாதாரணமான நடுத்தர வகுப்பு பின்னணியைக் கொண்ட அவனது பெற்றோர்களுக்கு அவனது உடல்நலம் பெரும் கவலையைக் கொடுத்தது. இதனால் பயமுற்ற அவர்கள் தங்களது மகன் ராதேஷின் சிகிச்சைகாக சென்னையில் இருக்கும் அப்பல்லோ குழந்தைகள் மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். சென்னை அப்பல்லோ குழந்தைகள் மருத்துவமனையின் மூத்த மருத்துவ ஆலோசகர் மற்றும் குழந்தைகள் அவசரசிகிச்சைப் பிரிவின் தலைவர் டாக்டர் சுசித்ரா ரஞ்சித் [Dr Suchitra Ranjit, Senior Consultant, Chief of Pediatric ICU] அச்சிறுவனை சோதித்தார்.
சென்னை அப்பல்லோ குழந்தைகள் மருத்துவமனையின் சீனியர் கன்சல்டண்ட் மற்றும் பிடியாட்ரிக் ஐசியூ சீஃப் டாக்டர் சுசித்ரா ரஞ்சித் மற்றும் மருத்துவ குழுவுக்கு, அச்சிறுவனுக்கு பொருத்தமான கல்லீரலை தானமாக பெறும்வரை காத்திருந்து, அது கிடைத்ததும் உடனடியாக கல்லீரல் மாற்று அறுவைச்சிகிச்சை மேற்கொள்வதைத்தவிர வேறு வழியில்லை. அதேநேரம், அச்சிறுவனின் அசாதாரண உடல்நிலையில் இருந்து, மீட்டெடுத்து அவனை இயல்பு நிலைக்கு கொண்டுவர உதவும் அனைத்து முயற்சிகளையும் எடுத்துவிடுவது என மருத்துவர்கள் குழு முடிவெடுத்தது. இதற்கேற்ற வகையில் அச்சிறுவனை ‘காம்ப்ளெக்ஸ் ஐசியூ லிவர் சப்போர்ட் தெரபி’யின் கீழ் சிகிச்சையளித்தது மருத்துவர்கள் குழு. ‘காம்ப்ளெக்ஸ் ஐசியூ லிவர் சப்போர்ட் தெரபி’ என்பது, கல்லீரல் மாற்று அறுவைச்சிகிச்சையை வெற்றிகரமாக முடிக்கும் வரையில், நோயாளிகளின் உயிரைக் காக்க உதவிப்புரியும் சிகிச்சைக்கும் அவர்களது உயிருக்கும் இடையே ஒரு பாலம் போல உயிர்காக்க உதவும் சிகிச்சையாகும். மேலும் இந்த ஐசியூ லிவர் சப்போர்ட் தெரபியானது, நோயாளியின் கல்லீரல் முழுமையாக சரியாகும் வரை , அவர்களது முழு உடல் செயல்பாடுகளுக்கும், கல்லீரலின் செயல்பாடுகளுக்கும் ஆதரவளிக்கும் மருத்துவ நடைமுறையாகும்.
கல்லீரல் மாற்று அறுவைச்சிகிச்சை குழுவில் மருத்துவர் இளங்குமரன், ராதேஷின் பெற்றோர்கள் மற்றும் நெருங்கிய உறவினர்களின் கல்லீரல் அச்சிறுவனுக்குப் பொருந்துமா என்பதை கண்டறியும் சோதனைகளை மேற்கொண்டார். ஆனால் துரதிஷ்டவசமாக அவர்கள் அனைவரின் கல்லீரலும் அச்சிறுவனுக்கு பொருந்தவில்லை. இதனால் கல்லீரல் மாற்று அறுவைச்சிகிச்சையை உடனடியாக மேற்கொள்ள முடியாமல் போனது.
3 வயது சிறுவன் ராதேஷூக்கு ஏற்பட்ட கல்லீரல் செயலிழப்பு பற்றி சென்னை அப்பல்லோ குழந்தைகள் மருத்துவமனையின் சீஃப் ஆஃப் பிடியாட்ரிக் ஐசியூ மற்றும் சீனியர் கன்சல்டண்ட் டாக்டர். சுசித்ரா ரஞ்சித் [Dr Suchitra Ranjit, Senior Consultant, Chief of Pediatric ICU,Apollo Children Hospital] கூறுகையில், ‘’24 மணி நேரத்தில் அச்சிறுவனின் உடல்நிலை மேலும் மோசமடைந்தது. அவனது வாழ்க்கையானது நம்பிக்கையளிக்கும் நிலையில் இல்லை. கல்லீரல் செயலிழப்பானது மூளை, சிறுநீரகம் போன்ற உறுப்புகளில் பெரும் பாதிப்புகளை உருவாக்கும். அதேபோல் இரத்தம் உறைதல் மற்றும் இரத்த ஓட்டத்தையும் பாதிக்கும். இதன் தொடர்ச்சியாக அச்சிறுவனுக்கு சிடி ஸ்கேன் எடுத்தப்போது அவனது மூளையில் பெரும் பாதிப்பை உண்டாக்கும் வீக்கம் இருந்தது தெரியவந்தது. சிறுநீர் வெளியேறு தடைப்பட்டது. இரத்தம் உறைவது நிகழவில்லை. இதனால் அதிக இரத்தப் போக்கு உண்டானது. இதே சூழ்நிலையில், அவனுக்குப் பொருந்துகிற கல்லீரல் தானமாக கிடைக்கும்வரை அவன் காத்திருந்தால் அது அவனது உயிருக்கே ஆபத்தாக முடியுமென்பதை நாங்கள் உணர்ந்தோம். இதனால் அச்சிறுவனை சூப்பர் அர்ஜெண்ட் லிவர் ட்ரான்ஸ்ப்ளாண்ட் நோயாளியாக [super-urgent cadaveric liver transplant] குறிப்பிட்டு, சிகிச்சையளிக்க முற்பட்டோம். இதனால் தமிழ்நாட்டில் O+ கல்லீரல் தானமாக பெறப்படும்போது, அதைக் கொண்டு மேற்கொள்ளப்படும் கல்லீரல் மாற்று அறுவைச்சிகிச்சையில் இச்சிறுவனுக்கே முன்னுரிமை வழங்கப்படும். அதேநேரம் ராதேஷ் பிரச்னை தமிழ்நாடெங்கும் பரவியது. இதனால் மக்கள் மூலமான பொதுநிதி திரட்டல் இணைய தளத்திலும் ராதேஷின் பிரச்னை வைரலானது. இதன் மூலம் அவனுடைய மருத்துவ சிகிச்சைக்கு போதுமான அளவில் நிதி பெறப்பட்டது. அதேநேரம் அச்சிறுவன் தனக்கான கல்லீரலுக்காக காத்திருந்தான்’’ என்றார்.
மேலும் அவர் கூறுகையில், ‘’ராதேஷூக்கான கல்லீரல் கிடைக்கும் வரை அவனை எப்படியாவது காப்பாற்றுவது என்பதே எங்களுடைய இலக்காக இருந்தது. இதனால் உலகில் மிகச்சிறந்த லிவர்-யூனிட்களில் பயன்படுத்தப்படும் மிக உயர் தொழில்நுட்பத்திலான, உயிருக்கு ஆதரவளிக்கும் முழுமையான மருத்துவ நடைமுறையை அவனுக்காக மேற்கொண்டோம். வெண்டிலேஷனில் அச்சிறுவன் வைக்கப்பட்டான். கெமிக்கல்கள் மூலமான கோமா நிலை அளிக்கப்பட்டது.. மேலும் அவனுக்கு தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட டயாலிசிஸ் முறையான ரெனல் ரீப்ளேஸ்மெண்ட் தெரபி [Renal Replacement Therapy (CRRT – a technologically advanced form of dialysis)] தொடர்ந்து அளிக்கப்பட்டது. அதேபோல் தினமும் இரத்தத்தை சுத்திகரிக்கும் சிகிச்சையான ப்ளாஸ்மா- எக்ஸ்சேஞ்ச் டோஸ் அளிக்கப்பட்டது. ஆனால் இந்த சிகிச்சை அனைத்தும் தற்காலிகமானவை, அபாயம் அதிகமுள்ளவை ஆனால் அதேநேரம் உறுப்பு மாற்று அறுவைச்சிகிச்சைக்கு ஆதரவாக இருப்பவை. இருப்பினும் அச்சிறுவனுக்கு பொருந்துகிற கல்லீரல் கொடையாளர் யாரும் அமையவில்லை. ஆச்சர்யப்படத்தக்க வகையில் ராதேஷ், இயல்பான உடல்நிலைக்கு திரும்ப ஆரம்பித்தான்’’ என்றார்.
முற்றிலும் பாதிப்படைந்த ராதேஷின் கல்லீரல், முன்னேற்றமடைவதை உணர்த்தியது. கல்லீரல் மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப ஆரம்பிக்க, அவனது மூளை வீக்கம் குறைய ஆரம்பித்தது. சிறுநீரகத்தின் செயல்பாடுகளும் முன்னேற்றமடைந்தன. ராதேஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒன்பது நாட்களில் அதாவது ஏப்ரல் 20-ம் தேதி அவனுக்கு வென்டிலேஷன் அகற்றப்பட்டது. அதேபோல் உயிர்காக்கும் மருத்துவ நடைமுறைகளும் தொடர்வது நிறுத்தப்பட்டன.
ராதேஷ் டிஸ்சார்ஜ் ஆன பத்து நாட்களில், தன்னுடைய சகோதரி மற்றும் சகோதரனுடன் கிரிக்கெட் விளையாட ஆரம்பித்து இருக்கிறான். பள்ளிக்கூடம் சேர்வதிலும் மிகுந்த ஆர்வத்துடன் இருக்கிறான். பெரும் ஆதரவு எதுவுமில்லாத ஒரு சராசரி குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு, சென்னை அப்பல்லோ குழந்தைகள் மருத்துவமனை தனது அதிநவீன தொழில்நுட்பங்களையும், ஆதரவையும் முழுமனதோடு, முழு வீச்சோடு வழங்கியிருக்கிறது. ’உள்ளன்போடு உயிர்களைத் தொடுவது’ என்ற அப்பல்லோவின் நோக்கத்தை, இச்சிறுவனின் வாழ்க்கையில் நம்முடைய அனைவருக்கும் மேல் இருக்கும் அந்த சக்தியின் உதவி மூலம் தொட்டிருப்பது அப்பல்லோ மருத்துவமனைக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்திருக்கிறது.