மருத்துவமனைக்கு வெளியே உயிரை காப்பாற்றும் அப்பல்லோ

மருத்துவமனைக்கு வெளியே உயிரை காப்பாற்றும்  அப்பல்லோ

சென்னை அப்பல்லோ மருத்துவமனை, மருத்துவமனைக்கு வெளியே இதய செயலிழப்பால் பாதிக்கப்படுபவர்களின் உயிரைக் காப்பாற்றுவதில் முன்னோடியாக திகழ்கிறது!!
 

சென்னை: இந்தியாவில், ஒவ்வொரு வருடமும் ஏறக்குறைய 8 லட்சம் பேர் திடீரென பாதிக்கும் இதய செயலிழப்பால் இறக்கிறார்கள். இவர்களில் 80% பேர் மருத்துவமனை சூழலில் இல்லாமல், வெளியே மற்ற இடங்களில் இருக்கும்போது பாதிக்கப்படுவதும் தெரிய வந்திருக்கிறது.

இதய செயலிழப்பால் பாதிக்கப்பட்ட அடுத்த நான்கு நிமிடங்களுக்குள், சிபிஆர் எனப்படும் முதலுதவி சிகிச்சை செய்யாபடாவிட்டால்,  மீண்டும் சகஜநிலைமைக்கு கொண்டுவர இயலாத வகையில் மூளை பாதிப்புக்குள்ளாகிறது. இதய செயலிழப்பு என்பது இதயத்தின் செயல்பாடுகளை திடீரென முற்றிலும் முடக்குவதாகும்.

இதனால் ரத்த ஓட்டம் முற்றிலும் பாதிக்கப்படுகிறது.  {இதய துடிப்பு இல்லாமல் போவதால், ரத்த விநியோக ஓட்டம் தடைப்படுகிறது. இதனால் உடலுறுப்புகளுக்கு அவசியமான ஆக்ஸிஜன் இல்லாமல் போக உயிர் இழப்பை ஏற்படுத்துகிறது.

இதனால் சுய நினைவு இழத்தல் அல்லது நம்முடைய முயற்சிகளுக்கு பதில்வினை அளிக்காமலிருந்தல்,  வழக்கமான முச்சு தடைப்படுதல், உடலில் துடிப்பும் இரத்த அழுத்தமும் இல்லாமல் போதல் என மூன்று பிரச்னைகளால் பாதிப்பு உண்டாகிறது. இதனால் மருத்துவமனையில், சிகிச்சைகளுக்கான சூழலில் இல்லாத போது, சிகிச்சைக்காக ஒவ்வொரு நொடியும் கணக்கில் எடுத்து கொள்ளப்படும் அத்தகைய சூழலை ‘அவுட் ஆஃப் ஹாஸ்பிடல் கார்டியாக் அரெஸ்ட்’ [Out of Hospital Cardiac Arrest (OOHCA)] என்று அழைக்கிறார்கள். இந்த தருணத்தில் இதய செயலிழப்பால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ப்ரத்யேகமான சிகிச்சை அவசியம்.

    OOHCA ஏற்படுவதற்கு  கரோனரி தமனி நோய் (சிஏடி-  [coronary artery disease (CAD)]) மற்றும் கார்டியோமயோபதி [cardiomyopathy] போன்ற இதர இதய நோய்கள் பொதுவான காரணமாக இருக்கின்றன.. OOHCA நோயாளிகளில் 25% முதல் 30% பேருக்கு மட்டுமே ’மீண்டும் உடனடியான ரத்த ஓட்டம்’ [return of spontaneous circulation (ROSC)]  -ஐ கொண்டு வர முடிகிறது. ROSC- சகஜ நிலைமைக்குத் திரும்புவதை தொடர்ந்து அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்கள்.

 இவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாலும், இதய செயலிழப்பு உண்டான நேரத்தில், உடலின் இதரப்பகுதிகளில் இரத்த விநியோக ஓட்டம்  இல்லாததால், மற்ற உறுப்புகள் வெகுவாக பாதிக்கப்படுகின்றன. உடலுறுப்புகளில் உண்டான இத்தகைய சேதம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னரும் இந்த நோயாளிகள் மீளும் வாய்ப்புகள் மிகக்  குறைவாகவே உள்ளது.


    OOHCA அவசரநிலையுடன்,  சென்னை  அப்பல்லோ மருத்துவமனை, தீவிர மருத்துவ சிகிச்சை அறைக்கு கொண்டு வரப்படும் நோயாளிகளை உயிர்ப்பிப்பதில் ஒரு முன்னோடியாக திகழ்கிறது.. அப்பல்லோ மருத்துவமனையின் மூத்த இண்டர்வென்ஷனல் கார்டியாலஜிஸ்ட் டாக்டர்.  ரெஃபாய் செளகத்தலி [Dr. Refai Showkathali, Senior Interventional Cardiologist, Apollo Hospitals Chennai] வழிகாட்டுதலின் கீழ், சமீபத்தில் இருதய செயலிழப்பினால் பாதிக்கப்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்ட இரண்டு நோயாளிகளுக்கு புதிய வாழ்க்கையை அளித்திருக்கிறது  சென்னை அப்பல்லோ மருத்துவமனை.


    மார்பு வலியால் அவதிப்பட்ட 78 வயது நபர், சிகிச்சைப் பெறுவதற்காக மருத்துவமனை வரும் வழியிலேயெ நிலைக்குலைந்து சரிந்து விழுந்தார், அப்பல்லோ மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவு அறைக்கு வந்தவுடனேயே, அவருக்கு வென்டிலேட்டர் இணைக்கப்பட்டது. அடுத்த விநாடியே சிபிஆர் சிகிச்சை அள்ளிக்கப்பட்டது. இதனால் அவரது இதயத்துடிப்பு மீண்டும் துடிக்கத் தொடங்கியது.

இதயத்துடிப்புக்கு ஆதரவு அளிக்கும் வகையில், ஒரு ப்ரத்யேக பலூன் உள்ளே செருக்கப்பட்டது. ஆஞ்ஜியோக்ராமில் அவருடைய இதய ரத்த நாளத்தில் 100% அடைப்பு இருப்பதும் தெரிய வந்தது. இதனால் டாக்டர் ரெஃபாய் செளகத்தலி வழிகாட்டுதலின் கீழ், அவருக்கு உடனடியாக ஆஞ்ஜியோப்ளாஸ்ட் மேற்கொள்ளப்பட்டது. அவரது ரத்த நாளத்தில் சுண்ணாம்பு பொருட்களால் ஏற்பட்டிருந்த அடைப்புகள் நீக்கப்பட்டன. (மருத்துவ அடிப்படையில் இதனை “கால்சிஃபிகேஷன்” என்று கூறுவார்கள்). மேலும் இதய ரத்த நாளத்தில் ஸ்டெண்ட் வைப்பதற்கு ‘ரோடாப்ளேஷன்’ எனப்படும் சிறப்பு துளையிடும் நுட்பத்தைக்  கொண்ட மருத்துவ நடைமுறை அவருக்கு மேற்கொள்ளப்பட்டது.

 இதனால் அடுத்த சில நாட்களிலேயே நோயாளியின் இதயம் ரத்தம் செலுத்தும் செயல்பாட்டில் நல்ல முன்னேற்றம் ஏற்பட, அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
    

தனது 60 வயதுகளில், இருக்கும் ஒருவருக்கு  ஜூன் 2018-ல் காலையில் எழுந்ததும் லேசாக மயக்கம் வருவது போல இருந்ததால், அவர் ஒரு மருத்துவரைப் பார்க்க கிளினிக்கிற்கு சென்றார். அங்கு மருத்துவரைச் சந்திப்பதற்கு முன்பே க்ளினிக்கின் வரவேற்பறையில் திடீரென  சரிந்து விழுந்தார்.

இதனால் அங்கு அவருக்கு ரீசஸ்சிடேஷன் மருத்துவ நடைமுறை அளிக்கப்பட்டது. ஈசிஜி-யில் அவருக்கு எந்தவிதமான பெரிய பிரச்னையும் இருப்பதாக தெரியவில்லை. இதனால் அவர் உடனடியாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருக்கு பாதி சுயநினைவு இல்லை. இரத்த அழுத்தம் வேறு குறைவாக இருந்தது. எனவே அவரது நுரையீரல் இன்டுபேஷன் [intubation]  முறையினால் பாதுகாக்கப்பட்டு,  ஒரு வென்டிலேட்டரில் அவர் வைக்கப்பட்டார்.

அடுத்து உடனடியாக எக்கோ கார்டியோக்ராம் எனப்படும் இதயத்திற்கான ஸ்கேன் எடுக்கப்பட்டது, அதில் அவரது  இதயத்தைச் சுற்றி திரவம் இருப்பது தெரியவந்தது. மேலும் அத்திரவம் இதயத்திற்கு அதிக அழுத்தத்தை அளித்ததால், இதயம் சரிவர இயங்கவில்லை என்பது கண்டறியப்பட்டது. (மருத்துவ அடிப்படையில், இதை கார்டியாக் டம்போனேட் [cardiac tamponade] என்று அழைக்கிறோம்) இச்சூழல் பொதுவாக இதயம் ரத்தம் செலுத்துவதை தடுத்துவிடும்.. அதனால் திரவத்தை அகற்ற அவர் உடனடியாக இதய நுண் துளை வடிகுழாய் ஆய்வகத்திற்கு மாற்றப்பட்டார்.

அதற்கான மருத்துவ செயல்முறையை டாக்டர் ரெஃபாய் செளகத்தலி மேற்கொண்டார், அதன் மூலம்  இதயத்தைச் சுற்றி இருந்த 250 மில்லி திரவம் அகற்றப்பட்டது. திரவத்தை அகற்றிய உடனேயே, இரத்த அழுத்தம் சீராகத் தொடங்கியது, இதயமும் வழக்கம்போல் செயல்படத் ஆரம்பித்தது. பின்னர் அவரை மருத்துவர்கள் 24 மணி நேர இதய தீவிர சிகிச்சை பிரிவுக்கு அழைத்துச் சென்று கண்காணித்தனர்.

அதன்பிறகு  சாதாரண அறைக்கு மாற்றப்பட்டார். சிறுநீரக பிரச்சினை காரணமாக திரவம் சேர்ந்திருந்தது  மருத்துவ ஆய்வில் தெரிய வந்தது.. சில நாட்களில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட அவர், தற்போது சிறுநீரக பிரச்சினைக்கு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.


    இத்தகைய பிரச்னைகள் குறித்து அப்பல்லோ மருத்துவமனையின்  மூத்த இன்டர்வென்ஷனல்  இருதயநோய் நிபுணர் டாக்டர் ரெஃபாய் செளகத்தலி v[Dr Refai Showkathali, Senior Interventional Cardiologist], கூறுகையில், “இந்த 2 நோயாளிகளின் அனுபவமானது,  OOHCA சூழலில் இருக்கும் நோயாளிகளுக்கு மிகச்சரியான நேரத்தில் OOHCA மருத்துவ நிபுணர்கள் அளிக்கும் கார்டியாக் இன்டர்வென்ஷன் மிக மிக அவசியம் என்பதை  எடுத்துக்காட்டுகிறது.

இச்சிகிச்சை அனைத்தும் 24/7 செயல்படும் அப்பல்லோ மருத்துவமனைகளில் அளிக்கப்படுகிறது.  இத்தகைய பாதிப்புள்ள நோயாளிகளுக்கு நாம் தாமதிக்கின்ற ஒவ்வொரு நொடியும், அவர்கள் மீண்டு வரும் வாய்ப்புகளை மிகப்பெருமளவில் பாதிக்கும். ஏனென்றால் இதயம் வழங்கும் ரத்த விநியோகம் மற்ற அனைத்து உறுப்புகளுக்கு செல்வதில் உண்டாகும் போது அவையும் பாதிப்படைகின்றன.

சரியான நேரத்தில் கார்டியாக் இன்டர்வென்ஷன்  மருத்துவ நடைமுறைகளை பின்பற்றினாலும், எமெர்ஜென்சி மருத்துவர்கள்,  தீவிரச்சிகிச்சை மருத்துவர்கள் மற்றும் நர்சிங் பராமரிப்பு ஆகிய மூன்று பிரிவும் முழுவீச்சுடன் இணைந்து செயல்பட்டால் மட்டுமே பாதிக்கப்பட்டவர்கள் மீண்டுவருவதில் எதிர்மறையான தாக்கத்தை உருவாக்கும்’’ என்றார்.

    OOHCA பாதிப்புகளில் உண்மையான உடல்நிலை முன்னேற்றமானது  அவசரகால மருத்துவ நிபுணர்கள் மற்றும் இன்டர்வென்ஷனல் கார்டியாலஜிஸ்ட் இணைந்த ஒரு குழு ஆதரவுடன் இதர மருத்துவ குழுக்கள் விரைந்து நோயாளிகளின் மருத்துவ நடைமுறைகளை மேற்கொள்கின்றன.   

இத்தகைய முயற்சியானது பல்வேறு நோயாளிகளின் வாழ்வில்  மாபெரும் மாற்றங்களை உருவாக்கியிருப்பதை பல முன்னுதாரணங்களாக காணமுடிகிறது. எனவே சரியான நேரத்தில் சிறப்பு மருத்துவப் பிரிவுகளை அடையும் போது, அங்கு மேற்கொள்ளப்படும் இன்டர்வென்ஷன் மருத்துவ நடைமுறைகள் நோயாளிகல் உயிர்வாழும் வாய்ப்புகளை  பெருமளவில் அதிகரிக்கிறது. OOHCA இலிருந்து மீண்டு, மருத்துவமனையிலிருந்து நல்ல உடல்நிலையில் ஆரோக்கியமாக சென்ற நோயாளிகளுக்கு  பல எடுத்துக்காட்டுகள் உள்ளன.