அப்போலோ ஹாஸ்பிடல்ஸ் குழுமம், இந்தியா முழுவதும் 200 மையங்களில் மாபெரும் கோவிட் தடுப்பூசி இயக்கத்தை அறிமுகப்படுத்துகிறது!

அப்போலோ ஹாஸ்பிடல்ஸ் குழுமம், இந்தியா முழுவதும் 200 மையங்களில் மாபெரும் கோவிட் தடுப்பூசி இயக்கத்தை அறிமுகப்படுத்துகிறது!
அப்போலோ ஹாஸ்பிடல்ஸ் குழுமம், இந்தியா முழுவதும் 200 மையங்களில் மாபெரும் கோவிட் தடுப்பூசி இயக்கத்தை அறிமுகப்படுத்துகிறது!
அப்போலோ ஹாஸ்பிடல்ஸ் குழுமம், இந்தியா முழுவதும் 200 மையங்களில் மாபெரும் கோவிட் தடுப்பூசி இயக்கத்தை அறிமுகப்படுத்துகிறது!
அப்போலோ ஹாஸ்பிடல்ஸ் குழுமம், இந்தியா முழுவதும் 200 மையங்களில் மாபெரும் கோவிட் தடுப்பூசி இயக்கத்தை அறிமுகப்படுத்துகிறது!

அப்போலோ ஹாஸ்பிடல்ஸ் குழுமம், இந்தியா முழுவதும் 200 மையங்களில் மாபெரும் கோவிட் தடுப்பூசி இயக்கத்தை அறிமுகப்படுத்துகிறது!

 

தடுப்பூசி செலுத்துவதற்கான நேர முன்பதிவை அப்போலோ 24|7 மொபைல் அப்ளிகேஷன் [Apollo 24|7 App] மூலமாக முன்பதிவு செய்யலாம். அல்லது இந்தியா முழுவதிலும் பரவலாக அமைந்துள்ள 200 தடுப்பூசி மையங்களுக்கு நேரடியாகச் சென்று தடுப்பூசி செலுத்திக் கொள்ள மக்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.

 

சென்னை, ஜூன் 30, 2021: தேசிய அளவில் தடுப்பூசி இயக்கத்தை விரைவுபடுத்துவதற்காக, அப்போலோ ஹாஸ்பிடல்ஸ், இன்று இந்தியா முழுவதிலும் ஒரு மாபெரும் கோவிட் தடுப்பூசி இயக்கத்தை மேற்கொள்வதாக அறிவித்திருக்கிறது. மிகப்பிரம்மாண்டமான தடுப்பூசி இயக்கத்தை தமிழ்நாட்டின் மருத்துவ மற்றும் குடும்பநல்வாழ்வு அமைச்சர் மாண்புமிகு மா. சுப்ரமணியன் [Thiru Ma. Subramanian, Hon’ble Minister for Medical and Family Welfare] அவர்கள் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வின் போது, அப்போல்லோ ஹாஸ்பிடல்ஸ் குழுமத்தின் துணைத்தலைவர் திருமதி. ப்ரீத்தா ரெட்டி [Ms. Preetha Reddy, Vice Chairperson, Apollo Hospitals Group] மற்றும் நிர்வாக இயக்குநர் திருமதி. சுனிதா ரெட்டி [Ms. Suneeta Reddy, Managing Director, Apollo Hospitals Group] ஆகியோர் முன்னிலை வகித்தனர்., இந்தியா முழுவதிலும் 50 நகரங்களில் பரவலாக செயல்பட்டு வரும் அப்போலோ தடுப்பூசி மையங்களில் இந்த தடுப்பூசி இயக்கம் மேற்கொள்ளப்படும்.

அனைவருக்கும் தடுப்பூசி போடுவதை துரிதப்படுத்தவும், தடுப்பூசி எளிதில் கிடைக்கச் செய்யவும் அப்போலோ ஹாஸ்பிடல்ஸ் தனது அதிநவீன தொழில்நுட்ப அம்சங்களைக் கொண்ட அப்போலோ 24|7 ப்ளாட்ஃபார்மை [Apollo 24|7] பயன்படுத்துகிறது. தடுப்பூசி போட விரும்புபவர்கள், அப்போலோ 24|7 செயலியைப் பயன்படுத்தி தடுப்பூசி போடுவதற்கான நேரத்தை முன்பதிவு செய்த பிறகு தங்களுக்கு அருகில் உள்ள அப்போலோ தடுப்பூசி மையத்தைத் தேர்ந்தெடுக்கலாம். தடுப்பூசி போட விரும்புவர்கள் கூட்டம் காரணமாக காத்திருப்பதையும், வரிசையில் நிற்பதையும் குறைக்கும் வகையில், அவர்களுக்கு விருப்பமான நேரத்தை தேர்வு செய்ய, இந்த செயலி நிகழ்நேர தகவல்களை உடனுடக்குடன் வழங்குகிறது.

அதிக எண்ணிக்கையிலான மக்கள் தடுப்பூசி போடுவதை உறுதிசெய்யும் வகையில், இந்த மாபெரும் தடுப்பூசி இயக்கம் காலை 7 மணி முதல் இரவு 7 மணி தொடர்ந்து நடைபெறுகிறது. இதையடுத்து சென்னையில் பவன்ஸ் ராஜாஜி வித்யாஸ்ரம் பள்ளி [Chennai including Bhavan’s Rajaji Vidyashram School], சீயோன் மெட்ரிகுலேஷன் பள்ளி [Zion Matriculation] மற்றும் வானகரத்தில் உள்ள அப்போலோ ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடல்ஸ் [Apollo Speciality Hospitals Vanagaram] ஆகிய மூன்று இடங்களில் தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. இதன் மூலம் மக்கள் அனைவரும் தங்களுக்கு செளகரியமான நேரத்தில், தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கான ஸ்லாட்டை தேர்வு செய்ய முடியும். அனைத்து தடுப்பூசி மையங்களிலும் தடையற்ற அனுபவத்தை உறுதி செய்வதற்காக 10,000-க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு தடுப்பூசி போடும் போது பின்பற்றவேண்டிய பாதுகாப்பான நெறிமுறைகள் குறித்த பயிற்சியை அப்போலோ ஹாஸ்பிடல்ஸ் அளித்துள்ளது.

அப்போலோ ஹாஸ்பிடல்ஸ் குழுமத்தின் துணைத் தலைவர் திருமதி ப்ரீத்தா ரெட்டி [Ms. Preetha Reddy, Executive Vice Chairperson, Apollo Hospitals Group], “இந்த பெருந்தொற்றின் போது, நம் உயிரைக் காக்கும் ஒன்றாக தடுப்பூசி இருக்கிறது. அனைவருக்கும் தடுப்பூசி போடும் வரை யாரும் பாதுகாப்பாக இல்லை என்று நாங்கள் நம்புகிறோம். புதிய பரிணாம உருமாற்றம் பெற்ற வைரஸ் இருப்பது நம் நாட்டில் கண்டறியப்பட்டிருக்கிறது அதனால் தடுப்பூசி போட்டுக்கொள்வதே நம் வாழ்க்கையைப் பாதுகாத்து கொள்ள ஒரே வழி. மேலும் இந்தியாவில் பெரும் எண்ணிக்கையிலான மக்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு முன்னுரிமை அளிக்கப்படவேண்டும். எனவே இந்த மாபெரும் தடுப்பூசி இயக்கம்  இந்தியா முழுவதிலும் உள்ள பெரும் எண்ணிக்கையிலான மக்கள் தங்களுக்கு தடுப்பூசி போட்டுக்கொள்ள உதவும்’’ என்றார்.

 

அப்போலோ ஹாஸ்பிடல்ஸ், தற்போது வரை நாடு  முழுவதிலும்  2.1 மில்லியனுக்கும் அதிகமான தடுப்பூசி டோஸ்களை வழங்கியுள்ளது.  இதன் மூலம் தடுப்பூசி போடும் மிகப்பெரும் தனியார் அமைப்பு என்ற பெருமையைப் பெற்றிருக்கிறது. இந்த பிரம்மாண்டமான தடுப்பூசி முகாமிற்கு கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்து, அப்போலோ மையங்கள் தடுப்பூசி முகாம்களுக்கு தொடர்ந்து ஏற்பாடு செய்ய திட்டமிட்டு உள்ளது. 

அப்போலோ முன்வைக்கும் ஒரே வேண்டுகோள்… ’தயங்காதீர்கள். தயவுசெய்து தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள்.’

அப்போலோ ஹாஸ்பிடல்ஸ் பற்றி: 

அப்போலோ மருத்துவமனை, டாக்டர் பிரதாப் சி ரெட்டி-யால் 1983-ம் ஆண்டில் இந்தியாவின் முதல் கார்ப்பரேட் மருத்துவமனையாக சென்னையில் தொடங்கப்பட்டது. ஆசியாவின் பெரும் நம்பிக்கையைப் பெற்ற ஒருங்கிணைந்த மருத்துவ சுகாதார குழுமமாகத் திகழும் அப்போலோ, தற்போது 72 மருத்துவமனைகளில் 12,000-க்கும் மேற்பட்ட படுக்கைகள் உள்ளன. 3800-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள், 90 ஆரம்ப சிகிச்சை மையங்கள் மற்றும் 650 பரிசோதனைக் கூடங்களும் உள்ளன. 148-க்கும் மேற்பட்ட டெலிமெடிசின் மையங்களும், 15-க்கும் மேற்பட்ட மருத்துவக் கல்வி மையங்கள் மற்றும் ஆராய்ச்சி அறக்கட்டளை ஆகியவையும் உள்ளன. ஆராய்ச்சி அறக்கட்டளையில் பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆய்வு நிறுவனத்தில் உலக அளவிலான மருத்துவ சேவை சோதனை முயற்சிகள், தொற்றுநோயியல், ஸ்டெம் செல் ஆராய்ச்சி, மரபணு ஆய்வு [global Clinical Trials, epidemiological studies, stem cell & genetic research] உள்ளிட்ட பல பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அப்போலோ மருத்துவமனை பல முன்னணி, நவீன மருத்துவ முறைகளை நடைமுறைப்படுத்துவதில், மருத்துவ கண்டுபிடிப்புகளில் முதலீடு செய்வதில் முதன்மையான நிறுவனமாக திகழ்கிறது. ஆசியா, ஆப்பிரிக்கா, மற்றும் ஆ,ஸ்ரேலிய பகுதிகளிலேயே முதலாவதான ப்ரோட்டான் சிகிச்சை மையத்தை [Proton Therapy Centre] சென்னையில் அப்போலோ மருத்துவமனை நிறுவியுள்ளது. ஒவ்வொரு நான்கு நாட்களிலும் அப்போலோ மருத்துவமனை குழுமம் 10 லட்சம் மக்களை ஏதோ ஒரு வகையில் தொடுகிறது. இந்திய அரசாங்கம் அப்போலோ மருத்துவமனைக்காக நினைவு தபால் தலையை [commemorative stamp] வெளியிட்டுள்ளது. இது அரிதாக வழங்கப்படும் கவுரவம் ஆகும். மருத்துவமனை ஒன்றுக்கு இந்த கவுரவம் கிடைத்தது இதுவே முதல் முறை. அப்போலோ மருத்துவமனை தலைவர் பிரதாப் ரெட்டிக்கு மத்திய அரசு 2010-ம் ஆண்டு பத்ம விபூஷன் விருது வழங்கி கவுரவித்துள்ளது. கடந்த 37 ஆண்டுகளுக்கும் மேலாக உலகத் தரம் வாய்ந்த மருத்துவ கண்டுபிடிப்புகளில் தனது முதன்மைத்துவத்தை தொடர்ந்து தக்க வைத்துவருவதோடு, உலகத்தரத்திலான மருத்துவ சேவைகளையும், அதிநவீன தொழில்நுட்பங்களையும் மேற்கொண்டு வருகிறது.   மிகவும் மேம்பட்ட மருத்துவ சேவைகளை வழங்குவதில் நம் நாட்டின் மிகச்சிறந்த மருத்துவமனைகளில் தொடர்ந்து முக்கிய இடத்தை தக்கவைத்திருக்கிறது.

 

மேலும் கூடுதல் தகவல்களுக்கு இணையத்தில் பார்க்க: www.apollohospitals.com