அரையிறுதிக்கு அடியெடுத்துவைத்த ஆஸ்திரேலியா

அரையிறுதிக்கு அடியெடுத்துவைத்த ஆஸ்திரேலியா
அரையிறுதிக்கு அடியெடுத்துவைத்த ஆஸ்திரேலியா

அரையிறுதிக்கு அடியெடுத்துவைத்த ஆஸ்திரேலியா

19 வயதிற்கு உட்பட்டோருக்கான ஜூனியர் உலக கோப்பை தொடர்வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது.

இதில், குரூப் சி பிரிவில் முதல் இடம் பிடித்த பாகிஸ்தான் அணியும், குரூப் டி பிரிவில் 2-ம் இடம் பிடித்த ஆஸ்திரேலியா அணியும் காலிறுதி போட்டியில் மோதின. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 276 ரன்கள் எடுத்தது. டீகே வில்லி 71 ரன்னும், கொரே மில்லர் 64 ரன்னும் குவித்தனர். பாகிஸ்தான் அணி தரப்பில் காசிம் அக்ரம் 3 விக்கெட்டும் வீழ்த்தினார்.

இதையடுத்து, 277 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி, ஆஸ்திரேலியாவின் துல்லியமான பந்துவீச்சில் சிக்கி திணறியது.

பாகிஸ்தான் மெஹ்ரன் மும்தாஸ் 29 ரன்னும், அப்துல் பாசி 28 ரன்னும், இர்பான் கான் 27 ரன்னும் எடுத்தனர்.  இறுதியில், பாகிஸ்தான் 157 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் ஆஸ்திரேலியா 119 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியா சார்பில் வில்லியம் சல்மான் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணி அரையிறுதிக்கு முன்னேறியது.