கொரோனா வைரஸ் பீதியால், சென்னை-ஹாங்காங் விமான சேவை ரத்து
கொரோனா வைரஸ் பீதியால், பயணிகள் எண்ணிக்கை படிப்படியாக குறைந்ததன் காரணமாக, சென்னையில் இருந்து ஹாங்காங்குக்கு இயக்கப்பட்ட விமானம் சேவை ரத்து செய்யப்பட்டது. ஹாங்காங் செல்ல இருந்த 14 பயணிகள் இலங்கை வழியாக செல்லும் மாற்று விமானத்தில் அனுப்பிவைக்கப்பட்டனர். பயணிகளின் எண்ணிக்கை பொறுத்தே, ஹாங்காங் விமானத்தை தொடர்ந்து இயக்குவதா அல்லது ரத்து செய்வதாக என்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.