சன்டே சினி காம்போவை துவங்கியது கலர்ஸ் தமிழ்

சன்டே சினி காம்போவை துவங்கியது கலர்ஸ் தமிழ்
சன்டே சினி காம்போவை துவங்கியது கலர்ஸ் தமிழ்
சன்டே சினி காம்போவை துவங்கியது கலர்ஸ் தமிழ்
சன்டே சினி காம்போவை துவங்கியது கலர்ஸ் தமிழ்
சன்டே சினி காம்போவை துவங்கியது கலர்ஸ் தமிழ்
சன்டே சினி காம்போவை துவங்கியது கலர்ஸ் தமிழ்
சன்டே சினி காம்போவை துவங்கியது கலர்ஸ் தமிழ்
சன்டே சினி காம்போவை துவங்கியது கலர்ஸ் தமிழ்

சன்டே சினி காம்போவை துவங்கியது கலர்ஸ் தமிழ்

--------------

முதல்  தொகுப்பில் அட்டகாசமான இரண்டு பிளாக்பஸ்டர்கள் திரைப்படங்கள் வெளியீடு

--------------

மே 30, ஞாயிற்றுக்கிழமை மதியம் 1 மணிக்கு மதுர வீரனும், மாலை 4 மணிக்கு

தாரை தப்பட்டை பார்த்து ரசியுங்கள்

--------------


சென்னை, மே 29, 2021: தமிழகத்தின் மிகச் சிறந்த பொழுது போக்கு சேனலாக திகழும் கலர்ஸ் தமிழ், மக்களின் மன அழுத்தத்தை போக்கி உற்சாகப்படுத்தும் வகையில் சன்டே சினி காம்போ’ என்னும் பெயரில் பலவிதமான பொழுதுபோக்கு திரைப்படங்களைத் தேர்ந்தெடுத்து ஒளிபரப்பவிருக்கிறது. இந்நிலையில், அதன் முதில் தொகுப்பாக மே 30, ஞாயிற்றுக்கிழமை அன்று மதியம் 1 மணிக்கு மதுர வீரனும், மாலை 4 மணிக்கு தாரை தப்பட்டை என இரு அட்டகாசமான பிளாக்பஸ்டர்கள் திரைப்படங்களை வெளியிடவுள்ளது.


மதுர வீரன் திரைப்படமானது கதாநாயகன் துரையை பற்றியும் அவனது வாழ்க்கையில் அவன் சந்திக்கும் பல்வேறு பிரச்சினைகள் பற்றியதாகும். தனது தந்தையின் மரணத்திற்கு பழிவாங்குவதற்காக 20 ஆண்டுகளுக்கு பிறகு மலேசியாவில் இருந்து தனது சொந்த கிராமத்திற்கு வரும் கதாநாயகன் தனது கிராமத்தில் 2 சமூகங்களுக்கு இடையில் பல்வேறு பிரச்சினைகளை கண்டறிகிறான். இந்த நிலையில் அந்த சவால்களையும் மோதல்களையும் அவன் எவ்வாறு எதிர்கொண்டு தனது தந்தையின் சாவுக்கு பழிவாங்குகிறான் என்பதே இப்படத்தின் கதையாகும். கடந்த 2018-ம் ஆண்டு வெளியான இந்த திரைப்படத்தில் விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் கதாநாயகனா நடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவது பற்றியும் அதன் பெருமைகள் பற்றியும் இயக்குனர் அழகாக எடுத்துக்கூறியுள்ளார். இந்த படத்தை இயக்குனர் முத்தையா இயக்கி உள்ளார். இதில் சமுத்திரகனி மற்றும் மைம் கோபி, கதாநாயகியாக மீனாட்சி ஆகியோர் நடித்துள்ளனர்.


தாரை தப்பட்டை திரைப்படமானது நாட்டுப்புற கலை சம்பந்தமான திரைப்படம் ஆகும். இதை தேசிய விருது பெற்ற இயக்குனர் பாலா இயக்கி உள்ளார். இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தின் கதாநாயகனாக நடிகர் சசிகுமார் நடித்துள்ளார். இதில் இவர் கரகாட்டக் குழுவின் இசை கலைஞராக சன்னாசி என்ற பெயரிலும், கரகாட்டக் கலைஞராக சூரவல்லி என்ற பெயரில் வரலட்சுமி சரத்குமார் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர்.


இந்த 2 திரைப்படங்களையும் பார்த்து ரசித்து ஞாயிற்கிழமை அன்று மகிழ்ச்சியாக பொழுதை கழிக்க கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியை மதியம் 1 மணிக்கும் மாலை 4 மணிக்கும் டியூன் செய்யுங்கள், அதிரடி சண்டைகள், பாடல்கள் மற்றும் காதல் நிறைந் திரைப்படங்களை பார்த்து வார இறுதி நாளை உற்சாகத்துடன் கொண்டாடுங்கள். ரசிக்க கலர்ஸ் தமிழ் அலைவரிசையை மறவாது டியூன் செய்யுங்கள். அனைத்து முன்னணி கேபிள் வலையமைப்புகளிலும் மற்றும் சன் டைரக்ட் (CHN NO 128), டாடா ஸ்கை (CHN NO 1515), ஏர்டெல் (CHN NO 763), டிஷ் டிவி (CHN NO 1808) மற்றும் வீடியோகான் D2H (CHN NO 553) ஆகிய அனைத்து டிடீஹெச் தளங்களிலும் கலர்ஸ் தமிழ் அலைவரிசை கிடைக்கப்பெறுகிறது. தங்களது வசதிப்படி எந்த நேரத்திலும் இதை கண்டு மகிழ பார்வையாளர்கள் VOOT-ஐ டியூன் செய்யலாம்.

கலர்ஸ் தமிழ் குறித்து: 2018 பிப்ரவரி மாதத்தில் தொடங்கப்பட்ட கலர்ஸ் தமிழ், வயாகாம்18 குடும்பத்திலிருந்து வெளிவருகின்ற புதிய, குடும்ப பொழுதுபோக்கு சேனலாகும். ஒரு பெண்ணையும், அவளது குடும்பத்தையும் கொண்டாடுகிற, உத்வேகமளிக்கிற, உணர முற்படுகிற தனித்துவமான, வலுவான கதையம்சம் கொண்ட நிகழ்ச்சிகளின் மூலம் உலகெங்கும் வாழ்கிற தமிழ் பேசும் பார்வையாளர்களை மகிழ்விப்பதே இந்த சேனலின் நோக்கமாகும். “இது நம்ம ஊரு கலரு” என்ற விருதுவாக்குடன் களமிறங்கியிருக்கிற கலர்ஸ் தமிழ், கதை சொல்வது மீது முதன்மையான கவனத்தை செலுத்தும் தரமான, புதுமையான நிகழ்ச்சி அமைப்புகளின் வழியாக சிறப்பான பாரம்பரியம் கொண்ட தமிழ்நாடு கலாச்சாரத்தை அடிப்படையாகக் கொண்டதாக இதன் நிகழ்வுகள் இருக்கும். வேலுநாசிசி, ஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை, கலர்ஸ் சூப்பர் கிட்ஸ் மற்றும் ஒரு கதை பாடட்டுமா என்பவை எங்களது சேனலில் ஒளிபரப்பான பிரபல வரவேற்பு பெற்ற நிகழ்ச்சிகளாகும்.  டான்ஸ் Vs டான்ஸ், கலர்ஸ் காமெடி நைட்ஸ், ஓவியா, சிவகாமி, வந்தாள் ஸ்ரீதேவி, பேரழகி மற்றும் திருமணம், தறி மற்றும் மலர், கல்லாப்பெட்டி, கோட்டீஸ்வரி, உயிரே, அம்மன், இதயத்தை திருடாதே, மாங்கல்ய சந்தோஷம் போன்ற சமூக – குடும்ப நெடுந்தொடர்கள் தற்போது ஒளிபரப்பாகி வருகிற, ரசிகர்களின் பேராதரவை பெற்ற நிகழ்ச்சிகளுள் சிலவாகும்.

வயாகாம்18 குறித்து: வயாகாம்18 மீடியா பிரைவேட் லிமிடெட்., இந்தியாவில் அதிவேகமாக வளர்ச்சியடைந்துவரும் என்டர்டெயின்மென்ட் வலையமைப்புகளுள் ஒன்றாகும். பல செயல்தளங்களில் பல தலைமுறைகளுக்கான பல கலாச்சார பிராண்டு அனுபவங்களை வழங்கி வருகிற வலுவான பிராண்டுகளின் தாயகமாக இது திகழ்கிறது. 51% பங்குகளை கொண்டிருக்கும் டிவி18 மற்றும் 49% பங்குகளை கொண்டிருக்கும் வயாகாம்18 ஆகிய இரு பெருநிறுவனங்களின் கூட்டுமுயற்சி நிறுவனமான வயாகாம்18, சினிமா வழியாகவும் மற்றும் ஆன்லைன், வானொலி மற்றும் களஅளவில் கொண்டிருக்கும் தனது ஆதாரவளங்களின் மூலமாக கோடிக்கணக்கான மக்களை சென்றடைவதன் மூலம் இந்தியாவின் கேளிக்கை மற்றும் பொழுதுபோக்கை வரையறை செய்கிறது.