ஜனவரி 25 முதல் நான்கு பிரபலமான வெப் சீரிஸ்,களை ஒரு வார கால பொழுதுபோக்காக ஒளிபரப்ப உள்ளது கலர்ஸ் தமிழ்

ஜனவரி 25 இரவு 9 மணி முதல் உங்கள் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியை டியூன் செய்ய மறவாதீர்கள்

சென்னை, ஜனவரி 23:  பார்வையாளர்ககளை உற்சாகமளிக்கும் வகையில் மக்கள் பெரிதும் வரவேற்க்கப் பட்ட வெப் சீரிஸ்களான பாதி காதல் பாதி துரோகம், லண்டன் நிமிடங்கள், தொட தொட ரகசியம் மற்றும் பொய் விளையாட்டு என்று நான்கு சிறந்த  வெப் சீரிஸ்களை ஜனவரி 25 முதல் பிப்ரவரி 1 வரை இரவு 9 மணி முதல் ஒளிபரப்ப உள்ளது உங்கள் கலர்ஸ் தமிழ்.  

தமிழில் மொழி பெயர்க்கப்பட்ட VOOT ஒரிஜினல் தொடர்களான இவை காதல், வஞ்சகம் , பொய்கள், ஏமாற்றம்,கொலை மர்மங்கள் மற்றும் காணாமல் போன வழக்குகள் ஆகியவற்றின் மைய பொருளை உணர்த்தும் வகையில் அமைந்துள்ளது.

இரவு  9 மணிக்கு பாதி காதல் பாதி துரோகம் (இந்தியில் ஆதா இஷ்க்) என்ற பிரபலமான தொடர் ஒளிபரப்பாகிறது . ஆம்னா ஷெரீப், பிரதிபா ரந்தா மற்றும் கௌரவ் அரோரா ஆகியோர் நடித்த 9-எபிசோட்கள் கொண்ட இந்த சீரிஸ்,  தாயும் அவரது மகளும் ஒரே நபரைக் காதலிக்கும்போது ஏற்படும் விளைவுகளை என்ன என்று ஆராயும்  காதல்  நாடகம் ஆகும்.

அதை தொடர்ந்து இரவு 9:45 மணிக்கு அர்ஜுன் ராம்பால் மற்றும் புரப் கோஹ்லி நடித்த  லண்டன் நிமிடங்கள்  (இந்தியில் லண்டன் ஃபைல்ஸ்) ஒளிபரப்பாகிறது. அரசியல் ரீதியாக பிளவுபட்ட லண்டன் மீதான குற்றச் செயல்களின் சரமாரியான சில கொடூர மர்மங்களை வெளிக்கொணரும் பணியில் ஈடுபட்டுள்ள ஒரு ஊடக முதலாளியின் மகள் காணாமல் போன ஒரு முக்கிய வழக்கை சுற்றி கதை நகர்கிறது.

இரவு 10 மணிக்கு கண்டேல்வால் மற்றும் ஆஹானா குமார் நடித்த 6-எபிசோட் க்ரைம் த்ரில்லர் வெப் சீரிஸான பொய் விளையாட்டு (இந்தியில் மர்சி), ஒளிபரப்ப உள்ளது. தினமும் ஒரு மணி நேரம் ஒளிபரப்பப்படும் இந்த தொடர்  பார்வையாளர்கள் யார் குற்றவாளி என்று யூகிக்க வைக்கும்  வகையில் பொய்களும் துரோகங்களும் குறுக்கு வழியில் செல்லும்  உண்மையை வெளிக்கொணர்கிறது.

இறுதியாக, தொட தொட ரகசியம் (ஹிந்தியில் கான் கேம் சீசன் 2) 2020 இல் லாக்டவுன் நாட்களில் வெளியான சூப்பர்ஹிட் தொடரின் தொடர்ச்சியாகும். இந்த ஆறு எபிசோட்கள் கொண்ட தொடர் கொலை வழக்கை விசாரிக்கும் சிபிஐ அதிகாரி சம்பந்தப்பட்ட கொலை மர்மமாகும். 

வயகாம் 18 இன் தமிழ் சேனலான  உங்கள் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் தினமும்  இரவு 9:00 மணி முதல் 12 மணி வரை  வாரம் முழுவதும் நான்கு வெப் சீரிஸ் தொடர்களைக் கண்டு மகிழத் தயாராகுங்கள்.
 
கலர்ஸ் தமிழ் அனைத்து முன்னணி கேபிளிலும் கிடைக்கிறது. நெட்வொர்க்குகள் மற்றும் DTH இயங்குதளங்கள் - Sun Direct (CH NO 128), Tata Sky (CHN NO 1515), Airtel (CHN NO 763), Dish TV (CHN NO 1808), மற்றும் Videocon D2H (CHN NO 553).