தமிழகத்தில் "ஃபனி" புயல் எச்சரிக்கை!

தமிழகத்தில் "ஃபனி" புயல் எச்சரிக்கை!

தமிழகத்தில் பரவலான மழை பெய்து வரும் நிலையில், இந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடலில் தற்போது காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

"இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது, அடுத்த 36 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும். பின்னர் அது வலுப்பெற்று வடகிழக்கு திசை நோக்கி நகர்ந்து, புயலாக மாற வாய்ப்பு உள்ளது. புயலாக மாறினால் அதற்கு ஃபனி என பெயரிடப்படும். இந்த புயல் 30-ம் தேதி தமிழக பகுதியில் கரை கடக்க வாய்ப்பு உள்ளது. புயல் கரையை கடக்கும்போது 100 கிமீ வேகத்தில் காற்று வீசும். பலத்த மழைக்கும் வாய்ப்பு உள்ளது" என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.