அரசு பள்ளிகளுக்கு இடையே வட்டார அளவிலான செஸ் போட்டி

அரசு பள்ளிகளுக்கு இடையே வட்டார அளவிலான செஸ் போட்டி
அரசு பள்ளிகளுக்கு இடையே வட்டார அளவிலான செஸ் போட்டி

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் வருகிற 28-ந் தேதி முதல் ஆகஸ்டு மாதம் 10-ந் தேதி வரை நடைபெறவுள்ளது. இதனையொட்டி அரசு பள்ளி மாணவர்களுக்கு செஸ் போட்டி நடத்துவதற்கு பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி குமரி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை என 4 நிலைகளில் மாணவர்களுக்கான செஸ் போட்டிகள் நடத்த முடிவு செய்யப்பட்டன. அதன்படி கடந்த 14-ந் தேதி முதல் குமரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரசு பள்ளிகளில் செஸ் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு வட்டார அளவிலான போட்டிகள் நேற்று தொடங்கியது. அகஸ்தீஸ்வரம் வட்டார அளவிலான செஸ் போட்டிகள் நாகர்கோவிலில் உள்ள எஸ்.எல்.பி. அரசு மேல் நிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு தனித்தனியாக நடந்தது. போட்டியை மாவட்ட கலெக்டர் அரவிந்த் தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி புகழேந்தி, மாவட்ட விளையாட்டு அதிகாரி டேவிட் டேனியல், பள்ளி தலைமை ஆசிரியர் தயாபதி நளதம் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.