கோவை மாவட்டம் வடவள்ளியில் மக்கள் குடியிருப்பு பகுதிக்குள் யானைகள் நடமாட்டம்
கோவை மாவட்டம் வடவள்ளியில் மக்கள் குடியிருப்பு பகுதிக்குள் யானைகள் நடமாட்டம் உள்ளதாக வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. வடவள்ளியில் ஐ.ஓ.பி. காலனியில் மாலையில் சிசிடிவி கேமராவில் யானைகள் நடமாட்டம் பதிவானதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. யானைகளை கூச்சலிட்டு ஆரவாரத்துடன் விரட்டினால் அவை கோபமடைந்து தாக்கக் கூடும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.