சென்னையில் மீண்டும் அதிகரிக்க தொடங்கிய தங்கம் விலை: சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ரூ.44,360க்கு விற்பனை..!

சென்னையில் மீண்டும் அதிகரிக்க தொடங்கிய தங்கம் விலை: சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ரூ.44,360க்கு விற்பனை..!
சென்னையில் மீண்டும் அதிகரிக்க தொடங்கிய தங்கம் விலை: சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ரூ.44,360க்கு விற்பனை..!

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 உயர்ந்தது. தங்கம் பெண்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று, தென் இந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது. மேலும் தமிழ்நாட்டு பெண்களின் தங்க நகைகள் மீதான மோகம் மிகவும் அதிகம், இந்நிலையில் தமிழ்நாட்டில் சென்னை போன்ற முக்கிய நகரங்களில் தங்கத்தின் வர்த்தகம் மிகவும் அதிகம். இன்றைய தங்கம் விலையை சென்னை மற்றும் பிற நகரங்களை ஒப்பிடுகையில் மிகவும் குறைவான வித்தியாசம் மட்டுமே உள்ளது.

தங்கம், மிகப்பெரிய சொத்தாக மதிக்கப்படுகிறது. ஒருசில நேரங்களில் அது பொருளாதார பாதுகாப்பையும் தருகிறது. நிதி நெருக்கடியின் போது தங்கத்தை விற்று பணமாக்கி கொள்ளவும் முடியும். தங்கத்தின் மீது செய்யப்படும் முதலீடுகளுக்கு தக்க லாபம் கிடைத்து வருகிறது. இது தவிர, பொதுவாக குடும்பங்களில் தங்க ஆபரணங்கள் தலைமுறை தலைமுறையாக கைமாறி கொண்டே இருக்கும். அதனால் தான் குடும்பத்தில் தங்கத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த இடம் அளிக்கப்பட்டு வருகிறது.

தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்றம், இறக்கத்துடன் காணப்படுகிறது. அந்த வகையில் கடந்த 2 நாட்களாக தங்கம் விலை சரிந்து வந்தது. இந்நிலையில் இன்று மீண்டும் அதிகரித்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ரூ.44,360க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.35 உயர்ந்து ரூ.5,545க்கு விற்பனையாகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி 30 காசுகள் அதிகரித்து ரூ.76-க்கு விற்பனை செய்யப்படுகிறது.