எஸ்.ஆர்.எம் கல்வி நிறுவனத்தில் முதல் நாள் கலந்தாய்வு தொடக்கியது

எஸ்.ஆர்.எம் கல்வி நிறுவனத்தில் முதல் நாள் கலந்தாய்வு தொடக்கியது

எஸ்.ஆர்.எம் கல்வி நிறுவனம் மூலம் நடத்தப்படும் பொறியியல் படிப்பிற்கான நுழைவுத் தேர்வுக்கு உலகம் முழுவதிலும் இருந்து ஒரு இலட்சத்து 40 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். நுழைவுத்தேர்வு கணினி மூலம் எழுதப்படும் தேர்வு 123 நகரங்களில் மற்றும் 5 மத்திய கிழக்கு நகரங்களிலும் ஏப்ரல் 15 முதல் 25ஆம் தேதி வரை நடத்தப்பட்டது.

இந்த நுழைவுத் தேர்வின் முடிவுகள் ஏப்ரல் 27-ஆம் தேதி வெளியிடப்பட்டது. இந்த நுழைவுத் தேர்வு முடிவுகளின் மூலம் இதன் பன்முகத்தன்மை அனைவராலும் அறியப்படும் தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம் ,தெலங்கானா உத்தரப் பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் முதல் 10 இடங்களை பிடித்துள்ளனர் மற்றும் 310 மாணவர்கள் ஜம்மு காஷ்மீர் பகுதியில் இருந்தும் 150 மாணவர்கள் வடகிழக்குப் பகுதியில் இருந்தும் இந்த தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். ஒவ்வொரு நாளும் கலந்தாய்வில் 16 ஆயிரம் மாணவர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்று முதல் நாள் கலந்தாய்வில் மட்டும் 12 ஆயிரம் மாணவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். 62 இளநிலை பொறியியல் படிப்பிற்கான இட ஒதுக்கீடு சான்றிதழ் இன்றைய கலந்தாய்வில் வழங்கப்பட உள்ளன.

இந்தக் கலந்தாய்வில் பல்கலைக் கழகத்தின் நிறுவன வேந்தர் மூலம் நழைவு தேர்வில் முதல் 100 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு நிறுவனர் ஸ்காலர்ஷிப் மூலம் இலவச உயர் கல்வி பெறும் வகையில் ஸ்காலர்ஷுப்கள் வழங்கபடும். இந்தக் கலந்தாய்வில் 101 முதல் 3000 வரை இடங்களை பிடித்த மாணவர்களுக்கு 100 முதல் 25 சதவீதம் வரையிலான கல்விக் கட்டணச் சலுகைகள் முதல்  நாள் கலந்தாய்வில் வழங்கப்படும். 

முதல் நாள் கலந்தாய்வை தொடங்கி வைத்து மாணவர்களுக்கு பல்கலைக்கழகத்தின் நிறுவன வேந்தர் டாக்டர் தா.இரா. பாரிவேந்தர் அவர்கள் சிறப்பு சலுகைகளை வழங்கினார் மற்றும் விளையாட்டு, கலை மற்றும் பண்பாடு முன்னாள் மாணவர்களின் பிள்ளைகள் மற்றும் SRM பணியாளர்களின் பிள்ளைகள், சமுதாயத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள குடும்பத்தின் பிள்ளைகள் மற்றும் மாற்று திறனாளிகள் என பல்வேறு பிரிவுகளில் உள்ளவர்களுக்கு இலவச உயர்கல்வி திட்டத்தின் கீழ் பல்வேறு விதமான கல்வி சலுகைகளை மாணவர்களுக்கு பல்கலைக்கழகத்தின் நிறுவன வேந்தர் டாக்டர் தா.இரா. பாரிவேந்தர் அவர்கள் வழங்கினார். மேலும் இந்நிகழ்வில் ஆசிய தடகள விளையாட்டு போட்டியில் இந்தியா சார்பில் தங்க பதக்கம் பெற்ற திருச்சி முடிகண்டத்தை சார்ந்த கோமதி மாரிமுத்துவுக்கு பல்கலைக்கழக வேந்தர் சிறப்பு செய்தார்.