இந்தப் புத்தாண்டில் , பஜாஜ் பைனான்சின் இணையவழி நிலை வைப்பு (FD) மூலம் உங்களது சேமிப்பை வளர்ச்சியடையச் செய்யுங்கள்.
இந்தப் புத்தாண்டில் , பஜாஜ் பைனான்சின் இணையவழி நிலை வைப்பு (FD) மூலம் உங்களது சேமிப்பை வளர்ச்சியடையச் செய்யுங்கள்.
2020 ஆம் ஆண்டில் மிகப்பெரிய 4.2% வீழ்ச்சியைச் சந்தித்த பிறகு உலகளவிலான ஜிடிபி அதிலிருந்து மீண்டெழும் நம்பிக்கையின் ஒளிக்கீற்று மின்னுகிறது. அடுத்த நிதியாண்டில் இது 4.6% அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, புதிய ஆண்டின் தொடக்கத்தில், சந்தைகள் எழுச்சி காணும் என்ற முதலீட்டாளர்களின் எதிர்பார்ப்போடு,ஒரு புத்தம் புதிய ஆரம்பத்தின் நம்பிக்கையும் உடன் வருகிறது..ஒரு எதிர்பாராச் செலவு நிதியை உருவாக்குவது எப்போதுமில்லாத வகையில் இப்போது மிக அத்தியாவசியமானது என்பதை 2020 ஆம் ஆண்டு நமக்குக் கற்பித்தது.
நிலை வைப்பு (fixed deposit)போன்ற நிதித்திட்டங்களில் மொத்தமாக ஒரு தொகையை முதலீடு செய்வது,எதிர்காலத்தைப் பாதுகாக்க உங்களுக்கு உதவும் அதே சமயம், உங்கள் குறுகிய மற்றும் நீண்ட கால இலக்குகளை பூர்த்தி செய்யவும் உதவும்.. அதற்கான விருப்பத் தேர்வுகள் இன்றைய சந்தையில் அதிகளவில் இருந்தாலும், பஜாஜ் பைனான்ஸ் இணையவழி நிலை வைப்பு கணக்கை விருப்பத்தேர்வாகக் கருதுவது ஒரு புத்திசாலித்தனமான செயலாக இருக்கும். பஜாஜ் பைனான்ஸ்நிலை வைப்பு கணக்கில் முதலீடு செய்ய தேர்ந்தெடுப்பதன் மூலம் 2021 ஆம் ஆண்டில் உங்கள் சேமிப்பை நீங்கள் வளர்ச்சியடையச் செய்யக்கூடிய சில வழிகள் இதோ
வைப்புத் தொகைக்கு கவர்ச்சிகரமான வருமானம்.
குறிப்பாக 2020 ஆம் ஆண்டில் வைப்புத் தொகையின் மீதான வட்டி விகிதங்களை அனைத்து வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் குறைப்பதற்கு வழிவகுத்த, ரெப்போ வட்டி விகித குறைப்புக்களுக்குப் பிறகு, இதர வங்கிகள் மற்றும் கடன் வழங்குனர்களுடன் ஒப்பிடுகையில், பஜாஜ் பைனான்ஸ் வழங்கும் நிலை வைப்பு வட்டி விகிதங்கள் (FD interest rates) மிகவும் கவர்ச்சிகரமானவையாக விளங்குகிறது.
60 வயதிற்குட்பட்ட ஒரு நபராக, பஜாஜ் பைனான்ஸ் நிலை வைப்பு கணக்கில் நேரடியான முறையில் நீங்கள் முதலீடு செய்யும்போது, வட்டி விகிதம் 6.60% வரை பெற்று நன்மைகளை அடையலாம் .இருப்பினும், இணையவழியில் முதலீடு செய்யும் மூத்த குடிமக்களல்லாதவர்களுக்கு ஊக்கம் தரும் விதமாக கூடுதல் 0.10% சதவீத வட்டியை பஜாஜ் பைனான்ஸ் இணையவழி நிலை வைப்பு கணக்கு வழங்குகிறது. இதன் மூலம், 6.70% வரையிலான உறுதியான வருமானத்தைப் பெற்று உங்கள் சேமிப்பை வளர்க்கலாம்.
விளக்குவதற்கு ஒரு உதாரணமாக, நீங்கள் பஜாஜ் பைனான்ஸ் இணையவழி நிலை வைப்பு கணக்கில் ஒரு ஐந்து வருடகாலம் முதலீடு செய்யும் 60 வயதிற்குட்பட்ட ஒரு தனிநபர் என்று வைத்துக் கொள்வோம். இதர வங்கிகளுடன் ஒப்பிடும்போது, இந்த நிறுவனம் வழ்ங்கும் இணையவழி நிலை வைப்பு நிதி திட்டத்தில் உங்கள் சேமிப்பு எவ்வாறு வளர்ச்சியடையும் என்பது இங்கே காட்டப்பட்டுள்ளது:
எவ்வாறு வளர்ச்சியடையும் என்பது இங்கே காட்டப்பட்டுள்ளது:
வைப்பு வகை |
முதலீட்டுத் தொகை (ரூபாய்) |
வட்டி விகிதம்(%) |
வட்டி (ரூபாய்) |
முதிர்வுத் தொகை (ரூபாய்) |
பஜாஜ் பைனான்ஸ் இணையவழி நிலை வைப்பு கணக்கு |
20,00,000 |
6.70 |
7,65,999 |
27,65,999 |
இதர வாங்கியல்லாத நிதி நிறுவனங்கள் |
20,00,000 |
6 |
6,93,710 |
26,93,710 |
பாரம்பரிய வங்கிகள் |
20,00,000 |
4.9 |
5,51,442 |
25,51,442 |
குறிப்பு: மேலே கணக்கிடப்பட்ட வட்டி விகிதம் (ROI) வழங்கப்படும் உண்மையான வட்டி விகிதத்தில் இருந்து 4bps வரை மாறுபடலாம்.
இதற்கும் மேலாக- தங்களது சேமிப்புக்களை ஒரு பாதுகாப்பான சூழலில் வளர்த்துக்கொள்ளும் வழிகளை எதிர்நோக்கியிருக்கும் மூத்த குடிமக்களுக்கு வட்டி விகிதத்தில் 0.25% கூடுதல் பயனையும் பஜாஜ் பைனான்ஸ் வழங்குகிறது.
காலமுறையில் தொகை பெறும் விருப்பத்தேர்வு
காலமுறை அடிப்படையில் அவ்வப்போது தொகையை பெற்றுக் கொள்ளும் வசதியையும் தனது வாடிக்கையாளர்களுக்கு பஜாஜ் பைனான்ஸ் லிமிடட் வழங்குகிறது. இடர்பாடான கால கட்டத்தில், தொடர்ந்து வழங்கப்படும் வருமானத்தை சார்ந்திருக்க வழிவகை செய்யும் ஓய்வுக்குப் பிறகான வருமான விருப்பத்தேர்வு திட்டம். ஒரு தீர்மானிக்கப்பட்ட காலவரையோடு கூடிய திட்டத்தில் மொத்தமாக ஒரு தொகையை நீங்கள் முதலீடு செய்து உங்கள் வட்டித் தொகையை எந்த இடைவெளிகளில் நீங்கள் பெற விரும்புகிறீர்கள் என்பதை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.
அது மாதாந்திர, கால்வருட, அரைவருட, அல்லது வருடாந்திர அடிப்படையில் வழங்கப்படும். நிலை வைப்பு கணக்கு முதிர்வு காலத்தை எட்டியவுடன், முதிர்வுத் தொகை முழுவதும் நேரடியாக உங்கள் வாங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டு தவறாமல் நீங்கள் பணம் பெறுவதை உறுதி செய்யும். .
உண்மையில், நீங்கள் தேர்ந்தெடுக்கும் கால இடைவெளிகளின் அடிப்படையில், உங்களுக்கு வழங்கப்படும் தொகை எவ்வளவு என்பதை நீங்கள் அறிந்து கொள்ள விரும்பினால், பஜாஜ் பைனான்ஸ் FD Calculatorஐ பயன்படுத்துவதை கருத்தில் கொள்ளுங்கள். நீங்கள் பெறக்கூடிய தொகையை முடிவு செய்து கொள்ள உங்களுக்கு உதவக்கூடிய மிக உன்னதமான கருவி இது.
வைப்புத் தொகைக்கான மிக உயரிய பாதுகாப்பு.
2020 ஆம் ஆண்டில் பொதுவாக கவலையளிப்பதாக விளங்கிய ஒன்று ஒருவரின் முதலீட்டுக்கான பாதுகாப்புப் பற்றியது தான், மேலும் இந்தக் கவலை 2021 ஆம் ஆண்டிலும் தொடரக்கூடும். 2021 ஆம் ஆண்டில் ஒரு மாற்றத்தை அளிக்கும் விதமாக, ஒரு சரியான முதலீட்டை செய்வதின் மூலம் கவலை மறந்து ஓய்வாக நீங்கள் இருக்கலாம். பஜாஜ் பைனான்ஸ் லிமிடட் அதன் நிலை வைப்பு கணக்கின் நிலைத்தன்மை குறித்த ICRA யின் MAAA மற்றும் CRISILலின் FAAA மதிப்பீடுகளோடு தங்களது முதலீட்டாளர்களுக்கு, மிகச் சிறந்த பாதுகாப்பை அளிப்பதை உறுதி செய்கிறது. இந்த நிலைத்தன்மை குறித்த மதிப்பீடுகளோடு, கூடுதலாக, வழங்கப்படாத வைப்பு நிதிகள் எதுவும் இல்லாத ஒரு நிறுவனமாக தன்னை பஜாஜ் பைனான்ஸ் லிமிட்டட் பறைசாற்றிக் கொண்டுள்ளது, இதன் மூலம் முதலீட்டாளர்களுக்கான பாதுகாப்பான முதலீட்டுத் திட்டங்களுக்கு மத்தியில் ஒரு முன்னணி நிறுவனமாகத் திகழ்கிறது.
உங்கள் வசதிப்படி சேமியுங்கள்.
வரையறுக்கப்பட்ட காலம் மற்றும் செலுத்தப்பட்ட தொகைகளின் அடிப்படையில் நிலை வைப்பு நிதித் திட்டங்கள் கடினமாகவும் வளைந்து கொடுக்காத தன்மையுடையனவாகவும் கருதப்படுகிறது. பஜாஜ் பைனான்ஸ் எஃப்டியில் தனிப்பயனக்கத்துக்கான அனைத்து பயன்களும் உங்களுக்கு உண்டு. Systematic Deposit Plan (SDP)மூலம் குறைந்த பட்ச தொகையாக ரூ. 5,000/- மாதாமாதம் முதலீடு செய்வதை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம் அல்லது மிகக்குறைந்த தொகையான ரூ.25,000/-தொடங்கி மொத்தமாக ஒரு தொகையை முதலீடு செய்வதை தேர்ந்தெடுக்கலாம். இத்துடன் கூடுதலாக, நீங்கள் எஸ்டிபி மூலம் முதலீடு செய்யும் பொழுது மாதாந்திர முதிர்ச்சித் திட்டத்தை (மன்த்லி மெச்சூரிட்டி ஸ்கீம்) தேர்ந்தெடுப்பதின் மூலம் உங்கள் வைப்புத் தொகையின் வருமானத்தை (நீங்கள் தேர்ந்தெடுத்த கால இடைவெளியைப் பொறுத்து) மாதாமாதம் பெற்றுக் கொள்ளலாம். மாறாக, உங்களுக்கு வழங்கப்படும் தொகையை முழுமையாக ஒரே தவணையில் பெறுவதற்கு ஒரு முறை முதிர்ச்சித் திட்டத்தின் (சிங்கிள் மெச்சூரிட்டி ஸ்கீம்)மூலம் தனிப்பயனாக்கம் செய்து கொள்ளலாம். ஆக, பாஜாஜ் பைனான்ஸ் நிலை வைப்பு கணக்கு மூலம் உத்திரவாதத்துடன் கூடிய வருமானத்துடன் இணைந்து பாதுகாப்பு மற்றும் மிக மேலான வசதிகளை ஒருவர் பெறமுடியும்.
இலகுவான சில சொடுக்குகளை மேற்கொள்வதன் மூலம் சில நிமிடங்களிலேயே நீங்கள்Bajaj Finance online FDயில் முதலீடு செய்துவிட முடியும். சிக்கலான ஆவணமாக்கல், வேதனை தரக்கூடிய நீண்ட வரிசைகள் மற்றும் சலிப்பூட்டும் காத்திருப்பு நேரங்கள் போன்ற தொல்லைகள் எதுவுமில்லை. பஜாஜ் பைனான்ஸ் லிமிட்டட் உடன் உங்களுக்கான தனிப்பட்ட எதிர்பாராச்செலவு நிதியை உருவாக்கி இந்தப் புத்தாண்டை பொறுப்புடன் கொண்டாடுவதை நீங்கள் உறுதி செய்து கொள்ளுங்கள்.