இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையே இன்று கடைசி ஒரு நாள் போட்டி

இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையே இன்று கடைசி ஒரு நாள் போட்டி
இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையே இன்று கடைசி ஒரு நாள் போட்டி

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்காவும், 2-வது ஆட்டத்தில் இந்தியாவும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி டெல்லியில் உள்ள அருண்ஜெட்லி ஸ்டேடியத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இந்த மைதானத்தில் இந்தியா இதுவரை 20 ஒரு நாள் போட்டிகளில் ஆடியுள்ளது. அதில் 12-ல் வெற்றியும், 7-ல் தோல்வியும் கண்டுள்ளது. மற்றொரு ஆட்டத்தில் முடிவில்லை.

தென்ஆப்பிரிக்கா இங்கு ஆடியுள்ள ஒரே ஒரு ஆட்டத்திலும் வெற்றி பெற்றிருக்கிறது. இன்றைய போட்டி மழையால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. மழை பெய்வதற்கு 40 சதவீதம் வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.