டெல் ஸ்டெயின் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கைக்கு ஆபத்து!

டெல் ஸ்டெயின் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கைக்கு ஆபத்து!

லண்டன்: ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பெங்களூரு அணிக்காக ஆடிய போது தோள்பட்டையில் காயமடைந்திருந்தும் தென்ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ஸ்டெயின் உலக கோப்பை அணியில் இடம் பிடித்திருந்தார். ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு தோள்பட்டை காயம் சரியாகாத காரணத்தினால் அவர் உலக கோப்பை தொடரில் இருந்து விலகியுள்ளார்.

இந்நிலையில் ஸ்டெயின் காயத்தில் இருந்து குணமாகி மீண்டும் களம் திரும்ப அதிக காலம் பிடிக்கும் என்று அணி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அவரது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வரலாம் என்று கருதப்படுகிறது. 35 வயதான ஸ்டெயின் 93 டெஸ்டில் ஆடி 439 விக்கெட்டுகளும், 125 ஒரு நாள் போட்டிகளில் 196 விக்கெட்டுகளும் கைப்பற்றி இருக்கிறார்.