பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு தடை!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு தடை!

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் குஜ்ரன்வாலாவில் உள்ள நீதிமன்றத்தில் கிரிக்கெட் ரசிகர் ஒருவர் தாக்கல் செய்துள்ள மனுவில், இந்தியாவிடம் தோற்ற சர்பராஸ் அகமது தலைமையிலான பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு தடை விதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும் இன்சமாம் உல் ஹாக் தலைமையிலான தேர்வுக் குழுவை கலைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதை விசாரித்த நீதிபதி, மனு தொடர்பாக விரிவான பதில் அளிக்கக்கோரி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு உத்தரவிட்டார்.