ஜேசன் ராய்க்கு 2 போட்டிகளில் தடை
ஜேசன் ராய்க்கு 2 போட்டிகளில் தடை
இங்கிலாந்து அணியின் அதிரடி பேட்ஸ்மேன் ஜேசன் ராய் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் 2 போட்டிகளில் விளையாட தடை விதித்துள்ளது. மேலும், ஜேசன் ராய்க்கு ரூ. 2.5 லட்சம் அபராதமும் விதிக்கப்படுள்ளது.
இதனை மார்ச் 31ம்தேதிக்குள் செலுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால் அவர் என்ன தவறு செய்தார் என்ற விவரத்தை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவிக்கவில்லை.