ரஞ்சிதாவின் கர்ப்ப நாடகம் - கண்டுபிடிக்கும் தீனன்..! "ரஞ்சிதமே"
ரஞ்சிதாவின் கர்ப்ப நாடகம் - கண்டுபிடிக்கும் தீனன்..!
"ரஞ்சிதமே"
கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் "ரஞ்சிதமே" மெகாத்தொடருக்கு குடும்பங்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
இந்த நெடுந்தொடரில், நாயகி ரஞ்சிதாவாக மனிஷாஜித்தும், மாமியாராக ரூபாஸ்ரீயும், நாயகனாக சதீஷூம், முக்கிய கதாபாத்திரங்களில் ஹரிநந்தன், ராம்ஸ் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள்.
தொடரில் தற்போது, அருண் - கல்பனா திருமணத்தை தடுத்து நிறுத்தி, தான் கர்ப்பமாக இருப்பதாக பொய் சொல்லி அருண் வீட்டிற்குள் நுழைகிறார் ரஞ்சிதா. ரஞ்சிதாவின் வருகைக்கு வேதவல்லி கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்க, தன் அம்மாவை எதிர்த்து அருண் ரஞ்சிதாவை பார்த்துக் கொள்கிறார். ஒரு கட்டத்தில் வீட்டில் உள்ளவர்களுக்கு ரஞ்சிதாவின் கர்ப்பத்தில் சந்தேகம் வந்து மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச் செல்ல அதிலிருந்து லாவகமாக தப்பிக்கும் ரஞ்சிதா, அருணிடம் உண்மையை சொல்ல முடியாமல் தவிக்கிறார்.
இதற்கிடையே, ரஞ்சிதாவின் கர்ப்பத்தை சந்தேகப்படும் தீனன், அதன் உண்மையை கண்டுபிடிக்க அடுத்து நடக்கப்போவது என்ன ரஞ்சிதாவின் நாடகம் அருண் வீட்டில் தெரிய வருமா ரஞ்சிதாவின் நிலை என்னவாகும் என்கிற பரபரப்புடன் தொடர் விறுவிறுப்பாக நகர்கிறது.