எல் & டி பைனான்சியல் சர்வீசஸ் தமிழகத்தில் அறிமுகம் செய்கிறது ‘டிஜிட்டல் சஹி’

எல் & டி பைனான்சியல் சர்வீசஸ் தமிழகத்தில் அறிமுகம் செய்கிறது ‘டிஜிட்டல் சஹி’

* தமிழ்நாட்டில் டிஜிட்டல் நிதிச் சேவை வசதியை 40,000 பேர் பெற இலக்கு
* மகாராஷ்டிரா, மத்திய பிரதேசத்தில் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்ட திட்டம்
* 62 கிராமங்களில் 1.5 லட்சம் பேருக்கு டிஜிட்டல் பரிவர்த்தனை குறித்த விழிப்புணர்வு
* மதிப்பீட்டு ஆய்வின்படி ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஏற்ற வகையிலான திட்டம்.

மகாராஷ்டிரா மற்றும் மத்தியப் பிரதேசத்தில் மிகவும் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்ட திட்டத்தை முன்னணி வங்கியல்லாத நிதி நிறுவனமான (என்பிஎப்சி) எல் & டி பைனான்சியல் சர்வீசஸ் (எல்டிஎப்எஸ்) நிறுவனம் இன்று `டிஜிட்டல் சஹி’ எனும் திட்டத்தை கிராமப்புற மகளிர்க்கென தமிழகத்தில் விழுப்புரத்தில் அறிமுகம் செய்கிறது. `டிஜிட்டல் சஹி’ என்பது கிராமப்புற பெண்களுக்கு, டிஜிட்டல் கருவி மூலம் அனைத்து வகையான பரிவர்த்தனைகளை மேற்கொள்ள கற்றுத் தருவதோடு அதை பிறருக்கு கற்றுத் தரும் அளவுக்கு அவரைத் தயார் செய்வதுமாகும். 

இந்த திட்டமானது 100 டிஜிட்டல் சஹி அதாவது டிஜிட்டல் பயிற்சியாளரை உருவாக்குவது. அதாவது இவர் மூலம் 40,000 பேருக்கு டிஜிட்டல் மூலமான பரிவர்த்தனை மேற்கொள்ள கற்றுத் தருவதாகும். கூடுதலாக இந்தத் திட்டத்தின் மூலம் பெண் தொழில் முனைவோர் சிறப்பாக செயல்படவும் வழி வகுக்கப்படும். எல்டிஎப்எஸ் நிறுவனம் 500 பெண்களை கண்டறிந்து அவர்களுக்கு தொழில், பால், தயிர் சார்ந்த தொழில், கால்நடை வளர்ப்பு உள்ளிட்டவற்றில் பயிற்சியளித்து அவர்களது திறனை மேம்படுத்துவது இதன் முக்கிய நோக்கமாகும். 

கடந்த 2 ஆண்டுகளில் மகாராஷ்டிரா மற்றும் மத்திரப் பிரதேசத்தில் `டிஜிட்டல் சஹி’ திட்டத்தின்கீழ் 200 பெண்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இவ்விதம் பயிற்சி பெற்ற டிஜிட்டல் சஹி-க்கள் 1.5 லட்சம் பெண்களுக்கு ஸ்மார்ட்போன் மூலம் பண பரிவர்த்தனை மேற்கொள்வதற்கு பயிற்சி அளித்துள்ளனர். 

2017-ம் ஆண்டு மகாராஷ்டிராவில் இந்தத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தத் திட்டத்துக்கு 30 கிராமங்களில் அபரிமிதமான வரவேற்பு கிடைத்தது. இத்திட்டம் செயல்படுத்தப்பட்டதிலிருந்து டிஜிட்டல் மூலமான பரிவர்த்தனை 36% அளவுக்கு அதிகரித்துள்ளது. அந்த அளவுக்கு நிதி சார்ந்த விஷயங்களில் பெண்களிடையே விழிப்புணர்வும், புரிதலும் ஏற்பட்டுள்ளது. மகளிர் தொழில் முனைவோர் மூலமாக இந்த கிராமத்தின் வருவாய் 14.08% அதிகரித்துள்ளது. 2018-ம் ஆண்டில் இத் திட்டம் மத்திய பிரதேசத்துக்கும் விரிவுபடுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் பேசிய தமிழக ஆளுநர் மாண்புமிகு திரு பன்வாரிலால் புரோஹித் கூறியது: ``டிஜிட்டல் சஹி திட்டமானது சரியான திசையில் கிராமப்புற பெண்களை டிஜிட்டல் நிதி பரிவர்த்தனை மேற்கொள்வதற்கு வசதியாக உருவாக்கப்பட்டுள்ளது. கிராமப்புற பெண்களை முன்னிறுத்தி இந்தத்திட்டத்தை செயல்படுத்தப்படுவது எதிர்காலத்தில் இந்நாட்டை வலுப்படுத்தும் செயலாக இருந்தாலும் மத்திய அரசு அறிமுகம் செய்த `டிஜிட்டல் இந்தியா’ திட்டத்தை மேலும் வலுப்படுத்தும். அதற்கான ஸ்திரமான கட்டமைப்பை உருவாக்கவும் இது வழி வகுக்கும்,’’ என்றார். 

திரு சுனில் பிரபுனே, தலைமை அதிகாரி, கிராமப்புற நிதி மற்றும் டிஜிட்டல் பிரிவு தலைவர், தகவல் தொழில்நுட்ப பகுப்பாளர் கூறியது: இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டதன் பின்னணியில் மத்திய அரசு செயல்படுத்தும் அனைவருக்குமான நிதிச் சேவை வெற்றிகரமாக அமைய, இதில் கிராமப்புற பெண்களின் பங்களிப்பு மிகவும் அவசியமாகிறது. நிதி பரிவர்த்தனையை நன்கு அறிந்த பெண்கள் மூலம் பாலின பேதம் குறையும். அத்துடன் அவரது குடும்பத்திலும் மாற்றங்களைக் கொண்டு வருவதன் மூலம் தேசத்திலும் மாறுதல் உருவாகும் என்றார்.
  
திரு மனோஜ் ஷெனாய், தலைமை அதிகாரி, சொத்து நிர்வாகம் மற்றும் குழுமத்தின் சிஎஸ்ஆர் தலைவர் கூறியது: ``டிஜிட்டல் சஹி திட்டமானது மகாராஷ்டிரா மற்றும் மத்தியப் பிரதேசத்தில் நிதி பரிவர்த்தனை மற்றும் சேமிப்பில் மிகப் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. பெண்கள் நிதி பரிவர்த்தனைக்கு டிஜிட்டல் வழியை பின்பற்றத் தொடங்கியுள்ளனர். அந்த வழியில் தமிழக பெண்களையும் டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு தயார்படுத்துவோம் என்ற நம்பிக்கையை அளித்துள்ளது,’’ என்றார்.

டிஜிட்டல் சஹி பயிற்சி திட்டத்தை உருவாக்க, எல்டிஎப்எஸ் நிறுவனம் மக்களுக்கு தேவைப்படும் அடிப்படை விஷயங்கள் குறித்து ஒரு ஆய்வு நடத்தியது. விழுப்புரம் பகுதியில் சுமார் 1,050 வீடுகளில் மக்களின் சமூக வாழ்வியல் முறை, அவர்களிடையேயான தொழில்நுட்பம் குறித்த விழிப்புணர்வு ஆகியன ஆய்வு செய்யப்பட்டது. இந்த ஆய்வின் முடிவில் ஏறக்குறைய 99% பேருக்கு வங்கிக் கணக்கு இருப்பதும், அவர்கள் மிகவும் அரிதாக அதை செயல்படுத்துவதும் தெரியவந்தது. டெபிட் கார்டு இருந்தபோதிலும் அதை மக்கள் பயன்படுத்துவதும் மிக மிக குறைவாகவே இருந்தது. அத்துடன் இது குறித்த விழிப்புணர்வு மற்றும் அதற்கு மாறச் செய்வது அதாவது இன்டர்நெட் பேங்கிங், மொபைல் பேங்கிங், ஆதார் அடிப்படையிலான பணம் செலுத்தும் முறை, யுஎஸ்எஸ்டி ஆகியனவும் மிக மிக குறைவாகவே இருந்தது. ஆனால் இந்த பிராந்தியத்தில் மொபைல் போன் உபயோகம் மிக அதிகமாகவே இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் 50% வீடுகளில் உள்ளவர்கள்தான் இன்டர்நெட் சேவை குறித்து தெரிந்து வைத்திருந்தனர்.

தமிழகத்தில் இந்தத் திட்டமானது ஸ்ரீ அரபிந்தோ சொசைட்டி-யின் ஒத்துழைப்போடு செயல்படுத்தப்பட உள்ளது. இந்த தன்னார்வ தொண்டு நிறுவனம் கிராமப்புற பெண்களின் திறன் மேம்பாட்டுக்காக செயல்படுகிறது. அத்துடன் குடும்பத்தில் உள்ள குழந்தைகளின் திறமையை மேலும் வளர்க்கவும் அவர்களது கல்வித் திறனுக்கேற்ற திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கவும் திட்டமிட்டுள்ளது. 2020-ம் நிதி ஆண்டு முடிவில் எல்டிஎப்எஸ் நிறுவனம் 5 லட்சம் உறுப்பினர்களை 650 டிஜிட்டல் சஹி மூலம் 5 மாநிலங்களில் ஏற்படுத்த இலக்கு நிர்ணயித்து செயல்பட்டு வருகிறது. 

டிஜிட்டல் சஹி திட்டம் குறித்து: 

டிஜிட்டல் சஹி திட்டமானது எல்&டி பைனான்சியல் சர்வீசஸ் நிறுவனத்தின் முன்னோடித் திட்டமாகும். இத்திட்டத்தின் மூலம் கிராமப்புற பெண்களின் வாழ்க்கைத் தரத்தை அவர்களின் திறமையை மேம்படுத்துவதன் மூலும், டிஜிட்டல் நிதி பரிவர்த்தனையை அவர்களுக்குக் கற்றுவதே நோக்கமாகும். இதன் மூலம் டிஜிட்டல் நிதி பரிவர்த்தனை சமுதாயமாக உருவாக்குவதற்கான சூழலை ஏற்படுத்துவதே நோக்கமாகும்.

இந்த திட்டத்தின் பிரதான நோக்கமே ஸ்திரமான வளர்ச்சியை எட்டுவதாகும். பாலின சமத்துவத்தை உருவாக்குவது, குறிப்பாக கிராமப்புற பெண்களிடையே அதை ஏற்படுத்த உரிய பயிற்சியை குறிப்பாக டிஜிட்டல் பரிவர்த்தனைக்கான பயிற்சியை அளிப்பது, டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் அவர்களையும் சிறந்தவர்களாக உருவாக்குவதே நோக்கமாகும். இத்தகைய பயிற்சி பெற்ற பெண்கள் டிஜிட்டல் சஹி என்றழைக்கப்படுகின்றனர். ஒவ்வொரு சஹியிடமும், மொபைல் டேப்லெட் வசதியும், எல்டிஎப்எஸ் டிஜிட்டல் பைனான்சியல் விழிப்புணர்வு (டிஎப்எல்) கையேடும் இருக்கும். இதன் மூலம் மற்ற பெண்களுக்கு டிஜிட்டல் பரிவர்த்தனை செய்வதற்கு கற்றுத் தருவர். குறிப்பாக அரசின் திட்டங்கள் மற்றும் காப்பீடு குறித்தும் கற்றுத் தருவர். பெண்களை சிறு தொழில் முனைவோராக சமூகத்தில் உருவாக்குவது, அவர்களிடம் உள்ள தொழில் முனைவை பயிற்சியளித்து மேம்படுத்தி அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதே நோக்கமாகும்.