மே 3 வரை ஊரடங்கு நீட்டிப்பு

மே 3 வரை ஊரடங்கு நீட்டிப்பு

இந்தியாவில் மேலும் 19 நாட்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக பிரதமர் மோடி அறிவிப்பு.

ஊரடங்கில் மீன் பிடித்தலுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ள நிலையில் நாட்டுப்படகுகள் மூலம் மீன்பிடிக்கலாம் -தமிழக மீன்வளத்துறை அறிவிப்பு 

ஆன்லைனில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள் ரத்து செய்ய தேவையில்லை 

முழு கட்டணமும் அவரவர் வங்கி கணக்கில் செலுத்தப்படும் - இந்திய ரயில்வே அறிவிப்பு

தமிழகத்தில் 144 தடை உத்தரவை மீறியதாக 1 லட்சத்து 75 ஆயிரத்து 238 பேர் மீது வழக்கு.

 ஒரு லட்சத்து 48 ஆயித்து 342 வாகனங்கள்  பறிமுதல் .76 லட்சத்து 96 ஆயிரத்து 544 ரூபாய் அபராதம் விதிப்பு

சென்னையில் முககவசம் அணியாமல் வாகனம் ஓட்டினால் ரூ.500 அபராதம் வசூல் - இன்று முதல் அமல்.தமிழ்நாடு மோட்டார் வாகன சட்டம் 179வது பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்படும் - காவல்துறை

வரும் ஒரு வாரத்திற்கு மிக கடுமையான ஊரடங்குகடைபிடிக்கப்படும்

விவசாயிகளுக்கு பிரச்சினை இல்லாதவாறு, மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளன

ஒரு லட்சம் படுக்கைகளுடன் கூடிய 600 மருத்துவமனைகள் தயார் நிலையில் உள்ளன

தமிழகத்தில் 1173 பேருக்கு கொரோனா பாதிப்பு.இறப்பு விகிதம் 11 எட்டியது.