ஆடியோ குறித்து மனோகர் பாரிக்கர் விளக்கம்

ஆடியோ குறித்து மனோகர் பாரிக்கர் விளக்கம்

பனாஜி: ரபேல் விமான ஒப்பந்தம் தொடர்பான ஆவணங்கள் தனது படுக்கை அறையில் இருப்பதாக முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சரும் தற்போதைய கோவா மாநில முதல் மந்திரியுமான மனோகர் பாரிக்கர் கூறியதாக இன்று காங்கிரஸ் குற்றம் சாட்டியது, இது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், இது குறித்து மனோகர் பாரிக்கர் கூறியதாவது: "காங்கிரஸ் கட்சி வெளியிட்ட ஆடியோவில் உண்மைகளை திரிக்க எடுக்கப்பட்டுள்ள தீவிர முயற்சியாகும். ரபேல் ஒப்பந்த விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியின் பொய்க்கூற்றுகள் வெளிப்பட்டுள்ள நிலையில், காங்கிரஸ் இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளது. கேபினட் கூட்டத்திலோ அல்லது வேறு எந்த ஒரு கூட்டத்திலோ இப்படி ஒரு எந்த ஒரு உரையாடலும் நடக்கவில்லை.” இவ்வாறு அவர் கூறினார்.