நேற்று மருத்துவ கலந்தாய்வில் பங்கேற்ற 262 மாணவர்களில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
நேற்று மருத்துவ கலந்தாய்வில் பங்கேற்ற 262 மாணவர்களில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
சென்னை: மருத்தவ படிப்புக்கான கலந்தாய்வில் பங்கேற்ற 4 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்றைய தினம் நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் 4 மாணவர்களுக்கு தொற்று உறுதியதானது. சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று முதல் மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. மருத்துவக் கலந்தாய்வில் பங்கேற்ற 262 மாணவர்களில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தினம் 500 மாணவர்கள் வீதம் கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற் கொள்ளப்பட்டு வருகிறது. நேற்று பிற்பகல் மருத்துவ படிப்பில் சேருவதற்கான ஆணையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி மாணவர்களுக்கு வழங்கினார்.
இந்நிலையில் விழாவில் முதல்வர், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன், அமைச்சர் ஜெயக்குமார், மற்றும் வேறுத்துறை அமைச்சர்கள், அதிகாரிகள், மாணவர்களின் பெற்றோர்கள் என பலர் விழாவில் கலந்துக் கொண்டனர். முதல் நாளான நேற்று 7.5% உள்ஒதுக்கீட்டின் கீழ் ஆணை பெற அரசு பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர். இந்நிலையில் கொரேனா தொற்று தற்போது கண்டறியப்பட்டுள்ள நிலையில் விழாவில் பங்கேற்ற முதல்வர், அமைச்சர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுமா? என கேள்வி எழுந்துள்ளது. மேலும் நேற்று கலந்தாய்வில் பங்கேற்ற முதல்வர் இன்று சேலம் மாவட்டம் நங்கவள்ளியில் உள்ள குடமுழுக்கு விழாவில் பங்கேற்றுள்ளார்.