பால், பேருந்து கட்டண உயர்வை திணிக்கவில்லை அந்தந்த காலக்கட்டங்களுக்கு ஏற்ப உயருவது இயல்பான ஒன்றே.! அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

பால், பேருந்து கட்டண உயர்வை திணிக்கவில்லை அந்தந்த காலக்கட்டங்களுக்கு ஏற்ப உயருவது இயல்பான ஒன்றே.! அமைச்சர் கே.என்.நேரு பேட்டி
பால், பேருந்து கட்டண உயர்வை திணிக்கவில்லை; அந்தந்த காலக்கட்டங்களுக்கு ஏற்ப உயருவது இயல்பான ஒன்றே.! அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

பால், பேருந்து கட்டண உயர்வை நாங்கள் திணிக்கவில்லை என்றும், அந்தந்த காலக்கட்டங்களுக்கு ஏற்ப உயருவது இயல்பான ஒன்றே என்றும் அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். 5 மாநில தேர்தலுக்கு பிறகு பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை உயர்வு காரணத்தால் தமிழகத்தில் பால், பேருந்து கட்டணம் உயர வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது. இந்நிலையில் திருச்சியில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அமைச்சர் கே.என்.நேரு, “அரசு அதிகாரிகள் அதிக சம்பளம் கேட்டு போராடி வருவதால் பால், பஸ் கட்டணம் உள்ளிட்டவற்றில் சிறிய மாற்றம் இருக்கும். விலையேற்றத்தை வேண்டுமென்றே அரசு திணிப்பதில்லை.

அதிமுக ஆட்சியில் விலையை ஏற்றவில்லையா? ஒவ்வொரு காலகட்டத்திலும் பொருளாதார ரீதியாக ஏற்றம் வரும்பொழுது மக்கள் அதை சந்திக்கத்தான் வேண்டும். பால் விலை, பஸ் கட்டணத்தில் வரும் மாற்றம் குறித்து தமிழக முதல்-அமைச்சர் முடிவெடுத்து அறிவிப்பார்” என்று கூறினார்.  மேலும் பேசிய அவர், திமுக அரசை குறைகூறுவதில் அண்ணாமலைக்கும், ஜெயக்குமாருக்குமே போட்டி இருக்கிறது. எங்கள் மீது குற்றம் சுமத்தவில்லையென்றால், அண்ணாமலையால் கட்சியை நடத்த முடியாது. யார் விமர்சனம் கூறினாலும் மக்கள் திமுக பக்கமே உள்ளனர் என்றும் அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.