"பாரம்பரிய சமையல்"

"பாரம்பரிய சமையல்"

பெப்பெர்ஸ் டிவி யின் புத்தம் புதிய நிகழ்ச்சி சமையல் நிகழ்ச்சி "பாரம்பரிய சமையல்" ஞாயிறுதோறும் பகல் 12:00 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

தமிழ்நாட்டை எடுத்துக்கொண்டால் மதுரை சமையல், கொங்கு நாட்டு சமையல், செட்டிநாடு சமையல், சேலம் சமையல், நெல்லை சமையல், இஸ்லாமிய தமிழர் சமையல், கிராமிய தமிழர் சமையல் என பல வகை சமையல் முறைகள் இருக்கின்றன.

இப்போதெல்லாம் நண்பர்கள் ஒருவருக்கொருவர் ஏதேச்சையாக பார்த்துக் கொண்டால் கூட அவர்களது பேச்சில், “ஏங்க.. எங்களது வீடுகளில் இப்போது பாரம்பரிய சமையல் தான் செய்கிறோம்” என்று சொல்வதை பெருமையாகவே கருதுகிறார்கள்.

இதில் பெரும்பாலானோர் பாரம்பரிய உணவு வகைகளான சிறுதானியங்களான சோளம், கம்பு, குதிரைவாலி, வரகு, ராகி, சாமை, திணை இவற்றையெல்லாம் வாங்கி வைத்திருப்பார்கள். ஆனால் இவற்றை எப்படி சமையல் செய்து சாப்பிடுவது என்பது பலருக்கும் தெரியவில்லை என்பதே உண்மை.

ஆரோக்கியமாகவும் அதேசமயம் சுவையாகவும் இருக்க வேண்டும்.. இதை மக்களிடம் கொண்டு சேர்க்கும் விதமாகத்தான் பாரம்பரிய சமையல் என்கிற இந்த புத்தம் புதிய நிகழ்ச்சி உருவாகியுள்ளது.. சுவையாகவும் எளிமையாகவும் சமையல் செய்வது எப்படி என்பதை சொல்வது தான் இந்தப் பாரம்பரிய சமையல் நிகழ்ச்சியின் நோக்கமே.. 

உங்கள் பெப்பர்ஸ் டிவியில் இந்த பாரம்பரிய சமையல் நிகழ்ச்சி ஞாயிறுதோறும் பகல் 12:00 மணிக்கு ஒளிபரப்பாகிறது.. இந்த நிகழ்ச்சியை தொகுப்பாளர் சுரேஷ் என்பவர் சுவாரஸ்யம் குறையாமல் தொகுத்து வழங்குகிறார்.