பிரதமர் மோடி இன்று ரூ.100 நாணயத்தை வெளியிட்டார்

பிரதமர் மோடி இன்று ரூ.100 நாணயத்தை வெளியிட்டார்
பிரதமர் மோடி இன்று ரூ.100 நாணயத்தை வெளியிட்டார்
பிரதமர் மோடி இன்று ரூ.100 நாணயத்தை வெளியிட்டார்

பிரதமர் மோடி இன்று ரூ.100 நாணயத்தை வெளியிட்டார்

புதுடில்லி:

மறைந்த பா.ஜ., தலைவர் விஜயராஜே நினைவாக, ரூ.100 நாணயத்தை, இன்று பிரதமர் மோடி வெளியிட்டார்.

பா.ஜ., கட்சியின் முன்னோடியான ஜன சங்கத்தை நிறுவிய தலைவர்களில் ஒருவர் விஜயராஜே. 1919, அக்.,12ல் பிறந்த அவர், 2001, ஜன.,25ல் மறைந்தார். விஜயராஜே, பிறந்த தினத்தை முன்னிட்டு, ரூ.100 நாணயம் இன்று வெளியிடப்பட்டது. வீடியோ கான்பரன்சிங்கில் கலந்து கொண்டு பிரதமர் மோடி இந்த நாணயத்தை வெளியிட்டார்.

இந்நிகழ்ச்சியில், விஜயராஜே குடும்பத்தினர் மற்றும் விருந்தினர்கள் பலரும் பல்வேறு பகுதிகளிலிருந்து வீடியோ கான்பரன்சிங் மூலம் கலந்து கொண்டனர்.