கேள்விக்குறியாகும் சரவணனின் வாழ்க்கை - அதிரடி திருப்பங்களுடன் “வாணி ராணி”

கலைஞர் தொலைக்காட்சியில் இரவு 10:00 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் மெகாத் தொடர் “வாணி ராணி”.

ராதிகா சரத்குமார் இரண்டு வேடங்களில் நடிக்கும் இந்த தொடருக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு அதிகரித்து வரும் நிலையில், தொடரில் தற்போது அதிரடியான திருப்பங்களும் இடம்பெற்று வருகிறது.

அதன்படி, பணம் திருட்டு, அடிதடி என அடுத்தடுத்து தவறு செய்துவிட்டு தலைமறைவாகி இருக்கும் ராணியின் மகனான சரவணனை தேடும் பணி தீவிரமாகியிருக்கிறது.

சரவணனை காப்பாற்ற போலீஸ் மூலம் வாணியும், சரவணனை கொலை செய்ய மறுபுறம் ரவுடிகளும் தேடி வரும் நிலையில் சரவணன் உயிர்பிழைப்பானா? சரவணின் நிலை என்னவாகும்? என்பது கேள்விக்குறியாகி இருப்பதால் தொடரில், விறுவிறுப்பு மேலும் கூடியிருக்கிறது.

இந்த தொடரில் ராதிகா சரத்குமார், வேணு அரவிந்த், பப்லு பிரித்விராஜ், அருண் குமார் ராஜன், விக்கி கிரிஷ், சாந்தி வில்லியம்ஸ், மமீலா ஷைலாஜா பிரியா  உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

“வாணி ராணி” நெடுந்தொடரை திங்கள் முதல் சனிக்கிழமை வரை, இரவு 10:00 மணிக்கு கலைஞர் தொலைக்காட்சியில் காணலாம்.